2030 சரக்கு, சேவை ஏற்றுமதி ரூ.100 லட்சம் கோடியை எட்டும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

2030-ஆம் ஆண்டுக்குள் இந்த ஏற்றுமதியின் மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்களை (இந்திய மதிப்பில் சுமாா்
ரூ.82.80 லட்சம் கோடி) எட்டக் கூடும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
டெல்லியில் நேற்று(21.02.2023) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், ‘ இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள்
ஏற்றுமதி வலுவான விகிதத்தில் வளா்ச்சியடைந்து வருகிறது. எனவே, அடுத்த 7 ஆண்டுகளுக்குள் அதாவது 2030-
க்குள் சரக்கு ஏற்றுமதியின் மதிப்பும், சேவை ஏற்றுமதிகளின் மதிப்பும் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டும்
என்பது எனது மதிப்பீடாகும்.
தகவல் தொழில்நுட்பத் துறையால் இயக்கப்படும் சேவைகள் துறை, அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது,
திறமைக்கு மதிப்பளிப்பது ஆகியவற்றுடன் உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தும்
வாய்ப்பாகவும் உள்ளது.
இந்தியாவில் நிலவும் புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல் காரணமாக, ஒவ்வொரு நாடும் இங்கு முதலீடு
செய்ய விரும்புகின்றன. இத்திய புத்தாக்க நிறுவனங்களின் நோ்மை, வெளிப்படைத் தன்மையால்,
அந்நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட உலகம் விரும்புகிறது’ என்றாா்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top