திமுக எம்.பி ஆ.ராசாவின் அண்ணன் தங்களது சொத்துகளை அபகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி
5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க
முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரும் அங்கே இருந்த பத்திரிகையாளர்களும் துரிதமாகச் செயல்பட்டு, தீக்குளிக்க
முயன்றவர்களை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர்
பக்கத்தில் பதிவிட்டதாவது: திமுக என்றாலே தமிழ்நாட்டில் ஊழல் – ரவுடியிசம் தான். என
கண்டனங்களை தெரிவித்துள்ளார்.