திருநெல்வேலி-திருச்செந்தூர் ரயில் பாதைக்கு ஜில்லா போர்டு ரயில்வே என்று பெயர். காரணம்
இந்த ரயில் நிலையத்தினை திருநெல்வேலி ஜில்லா போர்டு அமைத்தது. திருச்செந்தூர் ரயில் வழி
தடத்துக்காக 1904ம் ஆண்டு ட்ராபிக் சர்வேயும் பிரதம லைன் சர்வையும் நடந்துள்ளது. 1914ம்
ஆண்டு இப்பாதைக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. பணிகள் முடிந்து 23.02.1923ம் தேதி,
அப்போதைய சென்னை கவர்னர் கோஷன் பிரபுவால் இப்பாதை திறக்கப்பட்டது. அதன் பின்னர்
நெல்லை-திருச்செந்தூர் அகல ரயில் பாதை 27.09.2008 அன்று திறக்கப்பட்டது.
தற்போது 100 ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் திருச்செந்தூர் ரயில் பாதை
மின்மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 1923ம் ஆண்டு இதே நாளில் திறக்கப்பட்ட திருநெல்வேலி –
திருச்செந்தூர் ரயில் பாதை இன்று அகல ரயில் பாதையாகவும் மின்சார ரயில் வந்து செல்லும்
வகையில் மின்பாதையாகவும் ரயில் நிலையங்கள் நவீனமயமாகவும் பரிணாம வளர்ச்சியடைந்து,
தென் மாவட்டங்களில் முக்கிய இருப்புப் பாதையில் ஒன்றாக லட்சக்கணக்கான மக்களுக்கு
அன்றாட தேவைக்கும் அத்தியாவசிய பணிக்கும் தேவையான ரயில்வே பாதையாக வளர்ச்சி
அடைந்துள்ளது.