நிகழும் நிதியாண்டுக்கான காரீஃப் பருவத்தில் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று
வருகிறது. 20.02.2023 வரை 702 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது. இந்தப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்
மேற்கொள்ளப்பட்டதை அடுத்து 96 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏற்கனவே
பயனடைந்துள்ளனர்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 845 கோடிக்கும் மேல் நேரடியாக
பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. தடையற்ற கொள்முதல் நடைமுறைகளை மேற்கொள்ள
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 20.02.2023 வரை மத்திய தொகுப்பில் இருந்து 218
லட்சம் மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் நாட்டின் தேவையை
சமாளிக்கும் வகையில் போதுமான அரிசி இருப்பு தற்போது கைவசம் உள்ளது. நடப்பு காரீஃப்
பருவத்தில் 765.43 லட்சம் மெட்ரிக் டன் நெல் (514 லட்சம் மெட்ரிக் டன் அரிசி) கொள்முதல்
செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிடியாண்டில் காரீஃப் பருவத்தில் 749 லட்சம் மெட்ரிக் டன்
நெல் (503 லட்சம் மெட்ரிக் டன் அரிசி) கொள்முதல் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
மேலும், இந்த ஆண்டுக்கான ரபிப்பருவ நெல் கொள்முதல் மதிப்பீடு 01.03.2023 அன்று
நடைபெறவுள்ள உணவுச் செயலாளர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ரபிப் பருவப்
பயிரையும் சேர்த்து நிகழும் நிதியாண்டுக்கான பருவத்தில் சுமார் 900 லட்சம் மெட்ரிக் டன் நெல்
கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.