‘புதுடில்லி ஜெ.என்.யூ பல்கலையில் நடந்த தாக்குதல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்
வெளியிட்ட, ‘டுவிட்டர்’ பதிவில் தவறான தகவலை நீக்காவிட்டால், வழக்கு தொடர்வோம்’ என,
அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் என்ற ஏபிவிபி அமைப்பு தெரிவித்துள்ளது.
மதுரையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஏபிவிபி மத்திய செயலாக்க குழு உறுப்பினர்
முத்துராமலிங்கம் கூறியதாவது: புதுடில்லி ஜெ.என்.யூ., பல்கலையில் நடந்த விழாவில், ‘இந்திய
மாணவர் அமைப்பு’ என்ற பெயரில் வெளி நபர்களை அழைத்து வந்து, சத்ரபதி சிவாஜி படத்தை
உடைத்ததை கண்டிக்கிறோம்.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஏ.பி.வி.பி., அமைப்பினர் தமிழக
மாணவர்களை தாக்கியதாக பதிவிட்டுள்ளார். இது மொழி, இன ரீதியாக பிரிவினையை
ஏற்படுத்துகிறது.
பல்கலையில் நடந்ததை ஆராயாமல் தவறாக பதிவிட்டுள்ளது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில்
ராணுவ வீரருக்கு பாதுகாப்பில்லை. பெண் காவலர்கள், தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
முதல்வர் ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டது குறித்து விளக்கம் அளிப்பதுடன், மன்னிப்பு
கேட்டு தன் பதிவை நீக்க வேண்டும். இல்லையெனில், அவர் மீது சட்டரீதியாக அவதுாறு வழக்கு
பதிவு செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.