பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று(22.02.2023) வெளியிட்ட
அறிக்கை ஒன்றில்: 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிடத் துடிக்கிறது
என்றும், இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறைத்து
விட்டதாகவும் காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்து வருவது வன்மையாகக்
கண்டிக்கத்தக்கது.
பாஜக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு ரூ.31,982 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, பாஜக
ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக உயர்ந்து 2021-22-ல் ரூ.73,000 கோடியாக உள்ளது. மேலும்,
ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட, இத்திட்டத்துக்கு அதிகமான
தொகையே செலவிடப் பட்டுள்ளது என்றார்.