பாஜக தொண்டர்களின். சென்னை திருவேற்காடு பகுதியை சார்ந்த பாஜக முன்னாள் மண்டலத் தலைவர் கணேசன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அண்ணாமலை அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் கிளைத் தலைவர் சிவாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர் மக்கள் பணி தொடரவும் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கட்சியின் ஆணிவேரே தன்னலம் பாராது கட்சிக்காக அயராது உழைக்கும் அடிப்படை தொண்டர்கள் தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்களையும் கூறினார்.