தமிழ்நாட்டு வாய்க் கொழுப்பு அரசியல்வாதிகளில் மிகவும் பிரபலமானவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அநாகரீகமாக பேசி பலமுறை எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளார். அப்படி அநாகரீகமாக பேசி, தமிழ்நாட்டு மக்களுக்கு சிறந்த எண்டர்டைன்மெண்டாக இருந்தவர், கடந்த மக்களவை தேர்தலில் தேனியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு வாயை மூடிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அவரை மீண்டும் தமிழ்நாட்டு மக்களின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.
நாத்திகம் பேசுவது, இந்து கடவுள்களுக்கு எதிராக பேசுவது என வருடம் முழுவதும் கருப்பு சட்டை அணிந்து கொண்டு ஊரை ஏமாற்றினாலும், தேர்தல் வந்தவுடனேயே அதனை அப்படியே கைவிட்டு விடுவது திமுகவினரின் வழக்கம். தமிழ்நாட்டு முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் தொடங்கி கீழ்மட்ட தலைவர்கள் வரை திமுகவில் இதே நிலை தான்நீடிக்கிறது. இதற்கு தானும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். பெரியாரின் பேரனான இவர், வாக்கு கேட்டு வீடு வீடாக செல்லும் போது பொதுமக்கள் பூசிவிட்ட திருநீறை வைத்து கொண்டார்.
மேலும் தேர்தல் முடியும் வரை இந்து மதத்துக்கு எதிராக எத்தகைய கருத்தையும் தெரிவிக்காமல் மிகவும் கவனமாக இருந்தார், தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற உடனேயே அவரின் சுயரூபம் சில மணி நேரங்களில் வெளிப்பட்டது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வெளியே வந்த அவர், தன் நெற்றியில் இருந்த திருநீறை, ஏதோ அருவருக்கத்தக்க ஒன்று நெற்றியில் இருப்பது போல அழித்த விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இது ஒருபுறமிருக்க ஒரே டயலாக்கில் மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பியிருக்கிறார் இளங்கோவன். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர். அவர்களில் ஆண் நிர்வாகிகள் சால்வை அணிவிக்க முயல,அதனை வேண்டா வெறுப்பாக பார்த்த ஈவிகேஎஸ், சால்வைகளை கையில் வாங்கி அவர்களை உடனடியாக அனுப்பிவைத்தார். கட்சி நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டா வெறுப்பாக முகத்தை உர் என்று வைத்து கொண்டு போஸ் கொடுத்தார். அதே சமயத்தில் சாரதா என்ற பெண் நிர்வாகி அவருக்கு சால்வை அணிவிக்க வந்தார். அதுவரை முகம் வாடியிருந்த ஈவிகேஎஸ், உற்சாகத்துடன் சாரதாவை வரவேற்றார். மேலும் ஆண் நிர்வாகிகள் சால்வையை கைகளில் வாங்கிய அவருக்கு, சாரதா மட்டுமே சால்வையை அணிவித்தார். இதையெல்லாம் விட அடுத்து ஈவிகேஎஸ் சொன்ன டயலாக் தான் மாஸ். என்ன சாரதா நேத்த விட இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க என அவரை வர்ணித்தார்.
சாரதா இதனை கண்டுகொள்ளாத நிலையில் சாரதாவிடம் தப்பித்த அவர் கேமராவில் மாட்டிக் கொண்டார். இந்தப் பேச்சு வைரலான நிலையில் சமூக வலைதளங்கள் முழுவதும் மீம்ஸ்களால் நிரம்பி வழிகின்றன. சமூகவலைதளங்கள் முழுவதிலும் ஈவிகேஎஸ் இளங்கோவனை வைத்து தங்களது படைப்பு திறனை மீம்ஸ் கிரியேட்டர்கள் காட்டி வருகின்றனர்.