மதுரை அரசுப்பள்ளி காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்ய சென்ற உதயநிதி, தனியார் கேட்டரிங்கில் ஆர்டர் செய்யப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டு அதனை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் , இதுதான் திராவிட மாடலா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை தலைவராக உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக ஏற்கனவே அக்கட்சியின் சீனியர் தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேடை ஏறினாலூம், பொதுக்கூட்டங்களிலும் என்ன பேசுவதென்று தெரியாத அவர், வாய்க்கு வந்த வதந்திகளை வாந்தி எடுத்து வருகிறார். ஸ்டாலின் மகன் என்ற மிகப்பெரிய தகுதியை பெற்றுள்ள அவர், எந்த படிப்பில் நிபுணரோ தெரியவில்லை, அண்ணா பல்கலைக் கழக சிண்டிகேட் மெம்பராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீட் தேர்வு என்றால் என்னவென்றே தெரியாத இவர், நீட்டை பற்றி விமர்சிப்பதையெல்லாம் பார்த்து கடந்து செல்ல வேண்டிய இழிவு நிலையில் தமிழ்நாடு உள்ளது. இதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அடிக்கடி குறிப்பிடத் தவறுவது இல்லை
அண்மையில் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் செங்கல் சைக்கோ என்ற புனைப்பெயரும், பால்டாயில் என்ற புனைப்பெயரும் சூட்டப்பெற்ற இவர், தற்போது போட்டோசூட் உதயநிதி என்ற புதிய புனைப்பெயரையும் தனது பெயருடன் சேர்த்துள்ளார்.
மதுரை நாராயணபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் இவரும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடிய உதயநிதி, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது போன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின
நம்ம அமைச்சர் எவ்வளவு எளிமையாக பள்ளியில் சமைக்கப்பட்ட சத்துணவை ஏழை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார் என்று உபிக்கள் சிலாகித்து, உதயநிதியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்
ஆனால் உதயநிதியின் போட்டோ சூட் பரிதாபங்கள் பின்னரே வெளிச்சத்து வந்தன.
உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிட்ட அத்தனை குழந்தைகளுக்கு புது தட்டு, டம்ளர் வழங்கப்பட்டதுடன், அன்றைய தினம் மட்டும் காலை சிற்றுண்டி மீனாட்சி கேட்டரிங் என்ற தனியார் உணவகத்தில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது. அடுத்த நாள் முதல் அதே மாதிரியான டிபன் கிடைக்கும் என நம்பிய குழந்தைகளுக்கு ஏமாற்றம் தான்.
அதேசமயம் நடிக்கத் தெரியாமல் சினிமா ஹீரோவாக சுற்றி திரிந்தவர், அரசியல்வாதியாக, அமைச்சராக நன்றாகவே நடிக்கிறார் என மற்றவர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதுதான் திராவிட போட்டோ சூட் மாடலோ …