பட்டியல் சமுதாய மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அலட்சியம்; வீணான ரூ.10 ஆயிரம் கோடி; தட்டிக்கேட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் கைது

மத்திய அரசு பின்தங்கிய பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கிய ரூ.10 ஆயிரம் கோடியை திமுக அரசு திருப்பி அனுப்பியது. இதனை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜக பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமி மற்றும் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்

மத்திய அரசு பட்டியல் சமூக முன்னேற்றத்திற்காக, செட்யூல்ட் கேஸ்ட் சப் பிளான் என்ற திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கி வருகிறது. இந்த நிலையில்,2022-23 ஆண்டில் இவ்வாறு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 16,442 கோடி நிதியில் 10 ஆயிரத்து 466 கோடியை செலவு செய்யாமல் வைத்துள்ளதுடன் மீண்டும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் திராவிட மாடல் அரசை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிதி பட்டியலின மக்கள் வசிக்கும் பின் தங்கிய பகுதிகளில், வீடுகள், சாலை வசதிகள், கழிப்பறைகள், சமுதாய கூடங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்காக வழங்கப்பட்டவை. ஆனால் இவற்றை செலவு செய்யாமல், பணிகளை கிடப்பில் போட்டதால் பட்டியலின மக்களுக்கு அந்த நிதி பயன்படாமல் போயுள்ளது. இந்நிலையில் தங்களை சமூகநீதியின் காவலன் எனக் கூறி கொள்ளும் திறனற்ற திராவிட மாடல், பட்டியலின மக்களுக்கு இழைத்த அநீதியை கண்டித்து பாஜக பட்டியலின பிரிவு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் சிலைக்கு மனு அளித்து நூதன முறையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அம்பேத்கர் சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சென்னையில் அம்பேத்கர் சிலையிடம் மனு அளிக்க முயன்ற பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த நிலையில், கண்டன முழக்கங்களை எழுப்பியவாறே அவர்கள் பேருந்துகளில் ஏறினர்

இதனைத் தொடர்ந்து ஒரே நாடு டிஜிட்டல் உடன், சில புள்ளி விவரங்களை பகிர்ந்த தடா.பெரியசாமி திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் இதேபோல பட்டியலின மக்களுக்கான நிதி வீணாகவோ, வேறு திட்டங்களுக்கோ அல்லது செலவு செய்யப்படாமல் இருந்ததாக தெரிவித்தார். 13/05/1996 முதல் 13/05/2001 வரை ஆட்சியில் இருந்த கருணாநிதி சமத்துவபுரம் என்கின்ற பெயரில் கட்டிடங்கள் கட்டுவதற்காக பட்டியல் சமூக நிதியினை எடுத்து செலவு செய்தார். 1997-98ல் 594.53 கோடியும், 1998-99ல் 509.70 கோடியும், 1999-200 வருடத்தில் 169.07 கோடி ரூபாயும் செலவிடப்படாமல் திருப்பி அனுப்பியதாக தெரிவித்தார்.

அதேபோன்று 13/05/2006 முதல் 15/05/2011 வரை ஆட்சியில் இருந்த கருணாநிதி, பட்டியல் சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து இலவச கலர் டிவி வழங்கி விளம்பரம் தேடிக் கொண்டதையும் சுட்டிக்காட்டினார். 18/02/2010 அன்று தமிழகத்துக்கு வருகை புரிந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் N.M காம்ப்ளே,பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்காததை கண்டித்து அறிக்கை விட்டதையும் சுட்டிக்காட்டினார். தற்போது ஸ்டாலினும் 2021-2022ஆம் ஆண்டில் ரூ.2,418 கோடியும், 2022 – 2023ம் ஆண்டில் 10 ஆயிரத்து 446 கோடி செலவு செய்யாமல் ஏமாற்றியுள்ளார் என புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top