முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற தலைப்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் திறந்து வைத்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், யோகிபாபு உள்ளிட்ட திரை பிரபலங்களும், திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கண்காட்சியை பார்த்து (வலுக்கட்டாயமாக பார்க்கவைக்கப்பட்டு) ஸ்டாலினின் வரலாறு பிரமிக்க வைப்பதாக சிலாகித்து கூறினர்.
அப்படி என்ன இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. ஒன்றுமே இல்லாத மொக்கை கண்காட்சியை இவர்கள் ஆ, ஊ என சிலாகிப்பது ஏன் என்பதை தற்போது காணலாம் …
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ஒரு காட்சியும் ஒரு வசனமும் வந்திருக்கும். “இந்த தலை அந்த உடலுடன் ஒட்டப்போகிறது என டயலாக் பேசும் வடிவேலு, இன்னும் 200 வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நாம் எப்படி இருந்தோம் என தெரியவா போகிறது” என பேசியிருப்பார்.
அந்த வசனத்தை இந்த கண்காட்சியின் ஒவ்வொரு கேலரியிலும் அப்படியே மெய்ப்பித்து காட்டியிருக்கிறார் அல்லக்கை அமைச்சர் சேகர்பாபு. ஸ்டாலின் அமைச்சரவையில் எல்லோரும் அல்லக்கைகளாக இருக்க இவரை மட்டும் எப்படி அல்லக்கை அமைச்சர் என தனியாக அழைக்கலாம் என மற்ற அமைச்சர்கள் கேட்க கூடும். எனினும் அல்லக்கைகளுக்கு எல்லாம் சிறந்த அல்லக்கையாக இருப்பதால் தான் இவருக்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
சரி விஷயத்துக்கு வருவோம், முதலில் இந்த கண்காட்சியை சாதாரணமாக பார்த்தவர்கள் தலைவரது வாழ்க்கை வரலாற்றுக்கும், தலைவராக சித்தரிக்கப்படுபவரின் வாழ்க்கை வரலாற்றுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள். ஏனென்றால் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று கண்காட்சி, சாதாரண மனிதர்களிடம் இருந்து வேறுபட்டு அவர்கள் எவ்வாறு மக்களுக்கான தொண்டாற்றினார்கள் என்பனவற்றின் அடையாளமாக இருக்கும்.
இந்தியாவின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் பதவி வகித்த கர்ம வீரர் காமராஜரின் விருதுநகர், மற்றும் சென்னை நினைவு இல்லங்களை பார்த்தாலே அது புரியும் அப்படியென்றால் ஸ்டாலின் மக்களின் நலனுக்காக எதுவும் செய்யாமல் தலைவராகி விட்டாரா என்றால் நிச்சயமாக அதுதான் நெசம். கருணாநிதியின் மகன் என்ற ஒற்றை அடையாளத்தை தவிர, சாதாரண மக்களின் நன்மைக்கு அவர் என்ன செய்தார் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.
இளம் வயதில் அவர் மக்களுக்காக செய்த அதிகபட்ச சேவை கோபாலபுர வீட்டில் இருந்து, சேத்துப்பட்டு பள்ளிக்கு நடந்தே சென்றது தான். அதுவும் எதற்காக நடந்து சென்றார் என்பதை அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார். ”நடந்து வருவதற்கு பல காரணங்கள் உண்டு அதையெல்லாம் இப்போ சொல்ல முடியாது” என்று கூறினார். வெளியில் சொல்ல முடியாத அவ்வளவு கேவலமாக என்ன தியாகம் செய்தார் என்பதை 18+ வயதினர் அனுமானித்திருப்பீர்கள்
இதற்கு அடுத்தபடியாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மிசா சிறையில் ஒரு காவலர், ஒரு இளைஞரின் மார்பில் எட்டி உதைப்பது போன்ற பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. இதைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் மீண்டும் இம்சை அரசனின் வசனம் தான் ஞாபகம் வருகிறது.
ஸ்டாலின் மிசா வழக்கில் கைதானாரா இல்லையா என்ற சர்ச்சை வெடித்த போது, அப்போது அமைச்சராக இருந்தா மாஃபா பாண்டியராஜன், இவ்வாறு கூறினார். ஸ்டாலினை மிசா வழக்கில் கைது செய்திருந்தால் அதற்கான கடிதத்தை வழங்கி இருப்பார்கள் அதனை வெளியிடலாமே எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் மிசா குறித்து அமைக்கப்பட்ட இஸ்மாயில் , ஷா கமிஷன் அறிக்கைகளில் ஸ்டாலின் பெயர் இல்லை எனவும், மிசாவில் கைதாகி சிறையில் இருந்த ரா.செழியன் எழுதிய புத்தகத்திலும் அந்த தகவல் இல்லை என குறிப்பிட்டார்
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலையும் மிசா சிறையில் ஸ்டாலின் சிறையில் இருந்ததில்லை என்ற கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பான விவாதங்கள் 2019ல் சூடு பிடித்திருந்த நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டைன் ரவீந்திரன் இவ்வாறு தெரிவித்தார். “ இது முட்டாள்தனமான கேள்வி. ஸ்டாலின் மிசாவில் கைதாகி சிறையில் இருந்தது உண்மை தான். அப்போது அவர் திமுக உறுப்பினராக இல்லாததால் அவரை திமுகவினர் லிஸ்டில், இரண்டு கமிஷன்களும் சேர்க்கவில்லை” என்று கூறியிருந்தார்
.
இந்நிலையில் ஸ்டாலின் பிறந்தநாள் கண்காட்சி புரோமோஷனுக்காக கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் இதுபோன்ற ஒரு கடிதம் காட்டப்படுகிறது. அதில், திமுக உறுப்பினராக இருந்த ஸ்டாலின் மிசா வழக்கில் கைது செய்யப்பட்டார்’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது மக்களை முட்டாளாக்கியாது கான்ஸ்டண்டைனா இல்லை கலைஞர் தொலைக்காட்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒட்டுமொத்த திமுகவும் சேர்ந்து உருட்டும் உருட்டுக்களில், பெரிய உருட்டு இந்த மிசா உருட்டு என்பது தற்போது மக்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும்
.அப்படியென்றால் கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் இந்த கண்காட்சியை பார்த்து விட்டு அப்படியே மனமுருகி பேசியிருக்கிறார்களே என்ற சந்தேகம் வரலாம். இதற்கு தலைப்பிலேயே பதில் உள்ளது. அது தான் பெய்டு புரோமோசன், கமல்ஹாசனை பொறுத்தவரையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது ஒரு திரைப்படம் என்றால் கண்காட்சி என்பது ஒரு சீன்.. முழு திரைப்படமாக இருந்தால் என்ன ? இல்லை ஒரு சீனாக இருந்தால் என்ன. ? அவர் உலக நாயகன் ஆயிற்றே …..
இவ்வாறு பெய்டு புரோமோஷன் செய்த பிரபலங்கள் கண்காட்சி அரங்கிலேயே சம்பளத்தை வாங்கிவிட்டு கையொப்பமிட்ட காட்சிகளையும் காண முடிந்தது.
இவ்வாறு ஸ்டாலின் வீட்டில், அவரது அறையில் மாட்டி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை எடுத்து கொண்டு வந்து கண்காட்சி நடத்தினார் அ. அமைச்சர் சேகர்பாபு.
இப்படியெல்லாம் செய்து மு.க ஸ்டாலினை சர்வதேச தலைவராக மக்கள் மனங்களில் நிறுத்த சேகர்பாபு முயற்சி செய்கிறார்.
இதையெல்லாம் பார்த்து மு.க செல்வி போன்ற ஸ்டாலினின் உடன்பிறப்புகள் வேண்டுமானால் அழலாமே தவிர, சமுதாயத்துக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை. ஸ்டாலின் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் எந்தப் பயனும் இல்லை…