12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் தேர்வான தமிழ் தேர்வை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. வடமாநிலங்களோடு ஒப்பிட்டு அவர்களை தாழ்வாக பேசி, நாங்கள் தான் புத்திசாலிகள் என பேசி திரிந்த திராவிட மாடல் வாய்களுக்கு இந்த புள்ளி விவரம் பூட்டு போட்டது. ஏன் இந்த திடீர் ஆப்சென்ட், அப்படி என்ன தான் பிரச்சனை என்று ஆராய்ந்த போது தான், இது பல வருடங்களாக புள்ளி விவர கணக்கு காட்டுவதற்காக, தமிழகத்தை ஆண்ட திராவிட மாடல் அரசுகள் மேற்கொண்ட ஏமாற்று வேலையின் எதிரொலி என்பது புலப்பட்டது
முதலில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதற்கு பள்ளி கல்வித்துறை கூறும் பதில், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கும் சேர்த்து ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதால் தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது என்பது தான். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விவரங்கள் emmis portal என்ற இணையபக்கத்தில் சேகரிக்கப்படுகிறது. இந்த இணையதளம் இடைநிற்றல் மாணவர்களுக்கும் சேர்த்து ஹால் டிக்கெட்டை தயாரித்து விட்டதாக பள்ளி கல்வித்துறை தெரிவிக்கிறது. 3 மாதங்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லையென்றால் அவர்களின் விவரங்களை நீக்கி இணையதளத்தில் பதிவேற்ற வேண்டுமென்ற விதிமுறை இருக்க 2 வருடங்களாக பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களை ஏன் நீக்கவில்லை.
இந்த இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களையும் வைத்து கொண்டுதான் தமிழ்நாடு கல்வியில் நம்பர்-1 மாநிலம் என திராவிட மாடல் மார் தட்டி கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு இடைநின்ற மாணவர்களின் புள்ளிவிவரங்களை வைத்து கொண்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குற்றம் இல்லையா ?. இந்த நிர்வாக குறைபாட்டை சரிசெய்ய வேண்டிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனது வேலையை விட்டு விட்டு உதயநிதியுடன் ஊர் சுற்றுவதற்கு ஆர்வமாக உள்ளது ஏன் ? எனவும் சமூக ஆர்வலர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.
அடுத்ததாக 11ம் வகுப்பிலும் பொதுத்தேர்வை கொண்டுவந்துள்ள திராவிட மாடல், அதில் ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டாலும் 12 வகுப்புக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு 12ம் வகுப்பு செல்லும் மாணவன் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை 12ம் வகுப்பு பாடங்களுடன் சேர்த்து எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதற்கென மாணவர்களுக்கு தனி பயிற்சி வகுப்புகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இரண்டு வகுப்பு பாடங்களையும் ஒன்று சேர்த்து படிப்பது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதால் மாணவர்கள் தேர்வை கண்டே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் மாணவர்கள் தேர்வை புறக்கணித்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் திராவிட மாடல் அரசு அதனை சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போது செய்துவிட்ட தப்பை எப்படியாவது மறைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒருநாள் பள்ளிக்கு வந்திருந்தால் கூட பொதுத்தேர்வை எழுதலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது தவறான முன்னுதாரணம் என கல்வியாளர்கள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, யார் எதை எழுதினாலும் ‘ஆல்பாஸ்’ என்று அங்கீகரித்து அடுத்த தலைமுறையை தகுதியில்லாமல் உருவாக்க முயல்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.