தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சுடலை மாடன். இவரை திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவியும் தற்போதைய பஞ்சாயத்து தலைவரின் மாமியாருமான ஆயிஷா கல்லாஸி, ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுடலை மாடன் விஷம் குடித்தார். 3 நாட்களாக உயிருக்கு போராடிய சுடலை மாடன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.
மீண்டும் இதுபோன்ற ஜாதிய கொடுமைகள் நடக்காத வகையில் உடனடியாக குற்றவாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால், தமிழக அரசின் ஹெல்ப்லைன் எண்ணான 104 ஐயோ அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.