தென்காசியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை திமுகவின் ஊழல்களை பட்டியலிட்டதுடன், ஏப்.14ம் தேதி அனைவரின் ஊழல்களும் வெளிவரும் எனத் தெரிவித்தார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் திமுக அரசியலுக்காக மூன்று மலிவான யுக்திகளை பின்பற்றுவதாக தெரிவித்தார்
திமுகவின் 3 தேர்தல் யுக்திகள்
- வரலாற்றை திரித்து கூறுதல்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கல்வெட்டுக்கள் மட்டும் இல்லை என்றால், திராவிட மாடல் அரசு ராஜராஜ சோழன் தஞ்சை கோயில் சுற்றுச்சுவரை மட்டும் தான் கட்டினான். பிரான்சிஸ் என்பவர் தான் கோயிலை கட்டினார் என்று கூறியிருக்கும். 384 வருடத்துக்கு முன்னால் வந்த ஆங்கிலேயர் ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டிய பிறகு அது மெட்ராஸ் எனப் பெயரிட்டது. திமுகவினரை பொறுத்தவரை சென்னையின் வரலாறு என்பது அந்த 384 வருடங்கள் தான் . 1000,2000 வருடங்களுக்கு முன்னர் மண்ணின் மைந்தர்கள் செய்த சாதனைகளை எல்லாம் அவர்கள் மதிப்பது இல்லை.
2. ஆட்சிக்காக பொய் கூறுதல்
1947ல் பெரியார் வெள்ளையனே இந்தியாவை விட்டு போய்விடாதே, இந்தியாவால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது, முடிந்தால் லண்டனில் இருந்து கூட ஆட்சி செய் என்று பேசினார். ஆனால் திமுககாரர்கள் பெரியார் மழையிலும், குளிரிலும் நின்று சுதந்திரத்துக்காக போராடியதாக பேசுகிறார்கள். வைத்தியநாத அய்யர் அனைத்து சமுதாயமும் கோயிலுக்கு போக வேண்டுமென போராடினார். ஆனால் திமுகவினர் பெரியார் தான் போராடினார் என்று சொல்வார்கள்.
2011ல் ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி விளையாட்டு எனக் கூறி தடை செய்தது காங்கிரஸ். 2017ல் ஜல்லிகட்டு கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, ஜல்லிகட்டை தடை செய்தது பாஜக தான் என திமுக பொய்களை பரப்பியது. நீட் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என திமுகவினர் சொல்கிறார்கள்.
3. வதந்திகளை பரப்புதல்
2010 டிசம்பர் 21ல், இந்தியாவில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த நாமக்கல் எம்.பி காந்தி செல்வன். 2011ல் உச்சநீதிமன்றத்தில் நீட் தடை செய்யப்பட்ட போது அதனை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு எல்லா செய்திகளையும் மாற்றி மாற்றி கூறி, மாணவர்கள் இறப்புக்கு காரணமாக இருந்து, பின்னர் அதனை வைத்தே ஓட்டு வாங்கியது திமுக. பாஜக தேசிய தலைவர் நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.
டெல்லியை பார்த்து தமிழ்நாட்டில் மாடல் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அரசுப்பள்ளியில் இருந்து மாடல் பள்ளிக்கு செல்ல நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் நுழைவு தேர்வே நடக்காது எனத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட போது அந்த மாதிரி நடப்பது தெரியவே தெரியாது என தெரிவித்தார்
மார்ச்-4ம் தேதியே மாடல் பள்ளிக்கான நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. மார்ச் -7ம் தேதி அன்பில் மகேஷ் தேர்வு நடக்காது எனச் சொல்கிறார்.
மார்ச்.11ல் அந்த தேர்வு நடப்பதே தெரியாது என உதயநிதி தெரிவிக்கிறார். இவ்வாறு வரலாற்றை மாற்றுவது, பொய்களை கூறுவது, வதந்திகளை பரப்புவது ஆகிய மூன்றும் தான் திமுகவின் ஆட்சியை பிடிக்கும் யுக்தி என அக்கட்சியின் உண்மை முகத்தை தலைவர் அண்ணாமலை தோலுரித்து காட்டினார்.