டிவிட்டர், யுடியூப் சேனல்கள் மூலம் அல்ல; தொண்டர்களின் கடின உழைப்பினால் முன்னேறிய கட்சி பாஜக என பிரதமர் மோடி பேச்சு …

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், 2 மக்களவை தொகுதிகளுடன் தொடங்கிய பாஜகவின் பயணம், தற்போது 303 தொகுதிகளுக்கு பரவியுள்ளது. 4 திசைகளிலும் பரவிய ஒரே கட்சியாக பாஜக உள்ளது எனத் தெரிவித்தார்.

நமக்கு மிக வலிமையான ஜனநாயக அடித்தளம் உள்ளது. அதை தடுப்பதற்காகவே ஜனநாயக அமைப்பை தாக்குகிறார்கள். ஜனநாயக அமைப்புகள் தங்களது கடமைகளை செய்தால் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுகின்றன.

கடந்த 70 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் மீது இவ்வளவு நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை. இதை இன்னும் தீவிரமாக்கினால் சிலர் வருத்தமடைவார்கள். இன்னும் சிலர் கோபமடைவார்கள். ஆனால், ஊழல்வாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை நிச்சயம் நிறுத்தப்படாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், உடனே ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்மித்து விடுகிறார்கள்.

1984ல் நாடு மிகவும் துயரமான காலத்தை அனுபவித்தது. காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அப்போது நாம் அனைவரும் அந்த அலையில் அழிந்தோம். ஆனால் மன உளைச்சலுக்கு ஆளாகவில்லை, மற்றவர்களை குறைகூறவில்லை. இன்று கிழக்கில் இருந்து மேற்குவரை வடக்கில் இருந்து தெற்குவரை இந்தியா முழுவதும் பரந்து விரிந்துள்ள ஒரே கட்சி பாஜக தான்.

பாஜக தொலைக்காட்சி மூலமோ, செய்தித்தாள் மூலமோ வரவில்லை. ட்விட்டர் கணக்குகள் மூலமோ அல்லது யூட்டியூப் மூலமோ வரவில்லை. தொண்டர்களின் கடின உழைப்பால் வளர்ந்த கட்சி இதுவாகும்” என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top