சுதந்திரத்துக்கு பிறகு இந்திய பொருளாதாரத்தை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி அரும்பாடுபட்டார். 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதற்கு பின், உலக நாடுகள் பலவற்றிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இன்றைய எதிர்க்கட்சிகள் பல்வேறு விதமான கிண்டல் அடித்தனர்.
முதலில் நம்மை சுற்றியுள்ள நேச நாடுகளில் (Neighbouring country) நாம் நட்புறவை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பயணம் குறித்து, செல்லரித்து போய் கிடந்த செல்லா காசுகளான கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கட்சியும், திராவிட இயக்கங்களும் வசைபாடாத நாளில்லை எனலாம். ஆனால் இன்று உலக நாடுகளின் ஒப்பற்ற தலைவனாக நரேந்திர மோடி விளங்கும் போதும் அவரைப் பற்றி வசைபாட இவர்கள் தவறுவதில்லை.
அதன் விளைவாக ரஷ்யா, ஸ்ரீலங்கா, மொரிசியஸ், யுகே, மலேசியா,சிங்கப்பூர், மியான்மர், இஸ்ரேல்,ஜெர்மனி. யூ.ஏ.இ சவுதிஅரேபியா, தான்சானியா உள்ளிட்ட 18 நாடுகள் இந்திய ரூபாயில் (ருப்பி) வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளன. இது உலக அரங்கில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
இன்றைக்கு ஒரு அமெரிக்க டாலரின் விலை 82 ரூபாய் 20 காசு. அதாவது ஒரு அமெரிக்க டாலரை நாம் பெற வேண்டும் என்றால் 82ரூபாய் 20 காசுகள் கொடுக்க வேண்டும். மேற்சொன்ன 18 நாடுகளும் இதைத்தான் பின்பற்றி இருந்தன. அந்த நாடுகளில் வர்த்தகம் செய்ய வேண்டுமானால் அமெரிக்க டாலரை பெற்ற பின் தான் வர்த்தகம் செய்ய இயலும். 82 ரூபாய் 20 காசு நாம் செலுத்தும் போது அதற்கான வரியையும் நாம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் தான் டாலர் மதிப்பில் நமக்குத் தேவையான பிற பொருள்களை வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் பிரதமர் மோடியின் கடின உழைப்பால் இன்று 18 நாடுகளில் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய ஒப்புக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. உலக நாடுகளில் மேற்சொன்ன 18 நாடுகள் நமது கரன்சியை ஏற்றுக் கொள்வதால் நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருள்களுக்கு தெண்ட தீர்வை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. நமது கரன்சியை ஏற்றுக் கொள்ளக்கூடிய இந்த நாடுகள் நமக்கு கூடுதலாக கட்டணத்தை செலுத்துவதால், ஒரு சராசரி வருமானத்தை இந்தியாவுக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.
தேசத்தின் மரியாதையை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நிலைநிறுத்திக் கொண்டது என்றால், அது பிரதமர் மோடியின் கடின உழைப்பால் தான் என்று கூறினால் மிகையில்ல
கட்டுரையாளர்
ஆர் எஸ் கண்ணன், புதுச்சேரி