பாமரர்களின் பங்காளன் பிரதமர் மோடி ; ஒட்டுமொத்த உலகையும் வெல்வீர்கள் என ஆசிர்வதித்த விவசாயி

பிரதமர் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பர் என்பது காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளின் தொடர் பிரசாரமாக இருக்கிறது. இதற்கு பாஜகவினர் மறுப்பு தெரிவித்து, பிரதமர் மோடியின் வாழ்க்கையில் சாதாரண மக்களின் வாழ்க்கை தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்குகின்றனர். அந்த புள்ளி விவரங்களை மெய்ப்பிக்கும் வகையிலான ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் தான் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளில் ஜி-20 மாநாட்டின் விளம்பரத்திற்காக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. அவ்வாறு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தின் அருகே வந்த வயது முதிர்ந்த விவசாயி அன்னதட்டா என்பவர், பிரதமர் மோடியின் படத்தை தொட்டு வணங்கியும் முத்தமிட்டும் பேசினார். விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம், உடல்நலத்திற்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் தான் அடைந்த பலன்களை குறிப்பிட்டு பேசினார். மேலும் பெங்களூர், மைசூர் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் வெற்றி கொள்வீர்கள் என உருக்கமாக பேசினார். அவரது இந்த வீடியோ பல்வேறு தரப்பினரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இணையத்திலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top