கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான, பொள்ளாட்சி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கனிமவளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த கனிம வளக் கடத்தல் தொடர்பாக #திராவிடமாடல் அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கனிம வளக் கடத்தலை கண்டித்து பொள்ளாச்சியில் அண்மையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், சாராய அமைச்சருக்கும் இந்த கனிம கடத்தலில் பங்கு இருப்பதாகவும், தமிழ்நாட்டு வளங்கள் முழுவதும் #திராவிடமாடல் அரசால் சுரண்டப்படுவதாகவும் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் கனிமவளக் கடத்தலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக சார்பில், ஒவ்வொரு சோதனை சாவடியிலும், நிர்வாகிகள் அமரவைக்கப்படுவார்கள் என்றும் நானே களத்தில் இறங்குவேன் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கைக்கு பிறகு #திராவிடமாடல் ஓரளவு நடவடிக்கை எடுத்து சோதனைசாவடிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவையெல்லான் கண் துடைப்பு நடவடிக்கைகளாகவே இருந்ததே தவிர, கனிமவளக் கடத்தல் சற்றும் குறையாமல் தொடர்ந்தது. அதன்பின்னரே #திராவிடமாடல் கண் துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடத்தலை தொடர்ந்து செய்து வருவது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த கடத்தல் குறித்து படம்பிடிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபரை மாபியா கும்பல் தாக்கியதுடன் கேமராவையும் சேதப்படுத்தியுள்ளது. ஆனால் #திராவிடமாடல் அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில், பாஜக நிர்வாகிகள், தாக்கப்பட்ட நிருபர் பாலாஜியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்த காவல்துறையை வலியுறுத்தியுள்ளனர்.