ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்த மத்திய அரசு திட்டங்களையும் தெரிந்து கொள்ளும் வசதி; தொடங்கி வைத்தார் தலைவர் அண்ணாமலை

பாஜகவின் 44 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு Tamilarnalan.com என்ற இணையம் சார்ந்த செயலியை தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேச முன்னேற்றத்துக்காக ஓய்வின்றி செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் தன்னலமற்ற பணிகளை பெருமைப்படுத்துவது போல இந்த செயலி அமைந்துள்ளது. இந்த செயலியை உருவாக்கிய தீபக் சுவாமி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள்,  பிரதமர் மோடியின் மான்கி பாத் உரைகள், நமோ டிவி, கோரிக்கை பெட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக மத்திய அரசின் விவசாயம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், தொழில்துறை வளர்ச்சித் திட்டங்கள் என துறை வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையை கிளிக் செய்தாலும் அந்த துறையின் கீழ் உள்ள மக்களுக்கு நேரடியாக பலனளிக்கும் திட்டங்கள் பற்றி ஆடியோ வடிவில் விளக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி, பயனாளர்களுக்கான அடிப்படைத் தகுதி உள்ளிட்ட விவரங்களும் ஆடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர பயனாளிகள் நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் இணையதள முகவரியும் அதே பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள், மத்திய அரசு திட்டங்களில் பலன் பெற விரும்புவோருக்கு இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

4 thoughts on “ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்த மத்திய அரசு திட்டங்களையும் தெரிந்து கொள்ளும் வசதி; தொடங்கி வைத்தார் தலைவர் அண்ணாமலை”

  1. ஹரிராம் GR

    தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு விண்ணப்பம் திருச்சி முத்தரசநல்லூர் எனது ஊராட்சி ஒன்றியம் சுமார் 1000குடும்பங்கள் வசிக்கும் ஊர்.நாங்கள் மெயின் ரோடு வரவேண்டும் என்றால் ரயில்வே கிராசிங் வழியாக வரவேண்டும்.அஙகு ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும்.மக்கள் எளிதாக மெயின் ரோடு வரவேண்டும்.தாஙகள் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாங்களை பரிந்துரைக்கிறேன்
    நன்றி வணக்கம்
    ஹரிராம்.கு.ரா

  2. எளிய முறையில் அடிதட்டு மக்கள் மத்தியில் நமது திட்டங்களை கொண்டு செல்ல முடியும்…
    நன்றி நன்றி நன்றி
    மாநில தலைமைக்கு நன்றி

  3. Please spare few seconds to listen us. We all should work together to make BJP strongest. Since long waiting to pass message to state head. Unable to reach. Feel so sad

  4. முருகையா ராமன் அறந்தாங்கி

    மிகவும் சிறப்பு…
    இந்த 10 ஆண்டுகள் வளர்ச்சி திட்டங்கள் முழுமை அடைய வேண்டும் என்றால் இந்தியா திரும்பவும் பாஜக தலைமையில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top