ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நேற்று தமிழகமெங்கும் நடந்தது அதன் காட்சிகளை நாம் பல்வேறு இணையதளம் whatsapp facebook மற்றும் youtube களில் பார்த்தோம்.
இதில் என்ன பெருமை? இதில் என்ன செய்தி? இதில் என்ன அதிசயம்? என்று கேட்பவர்களிடம் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
அதிசயம் தான், பெருமை தான், ஏராளமான உள்ளே மறைந்திருக்கிற செய்திகள் தான், அவைகள் தான், என்னதான் என்பதைத்தான் சொல்லுகிறேன்.
கேளுங்கள்!
முதலில் யூனிஃபார்ம் என்னும் ஒரே மாதிரியான சீருடை பள்ளிகள், கல்லூரிகள், போலீஸ், ராணுவம், செவிலியர் உள்ளிட்டவர்களை தவிர மற்றவர்களிடம் இல்லாத குறிப்பாக எந்த வெகுஜன பொதுஜன அமைப்புகளிடம் இல்லாத சீருடை கல்ச்சர், கலாச்சாரம், இது ஒரு புதுமை, பெருமை நிச்சயம் இரண்டாவதாக எல்லா வயதினரும் 10 வயதுக்கு மேல் 21 வயது இளைஞர்கள் வரை நடுத்தட்டு மக்கள்,நடுத்தர வயது மக்கள், 60 கடந்தவர்கள், முதியோர், பல்வேறு தொழில்களில் இருப்போர், மந்திரிகள், சட்டமன்ற மாமன்ற உறுப்பினர்கள், சமூகத்தில் அத்தனை பிரிவினர்கள், ஒல்லி, நடுத்தரம், குண்டு என பல வகை உடல்வாகுகள் அழகான சேவிங், அது இல்லாத முகச் சவரம் செய்யாதவர்கள் என சமூகம் அத்தனையும் பிரதிபலிக்கும் மக்கள் கூட்டம் வியப்பு அல்லவா! வினோதம் அல்லவா ஆச்சரியம் அல்லவா! ஆண்டு முழுவதும் அரசின் செலவில் தினசரி காலை கட்டாய பயிற்சி என்பதால் வீராவேசத்தோடு, மிடுக்கான துடிப்பான எடுப்பான நடை போடும், ராணுவம் போலீஸ் போல, எப்போதாவது, வாரம் ஒரு முறை அல்லது இது மாதிரி அணிவகுப்புக்கு முன்னால் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே பயிற்சி பெற்ற இந்த ஆர்எஸ்எஸ் ராணுவம் போலீசுக்கு இணையான மிடுக்கோடு நடை போடுவது அதிசயம் அல்லவா ஆச்சரியம் அல்லவா…!
வியப்பு அல்லவா, இன்றைய தேவையும் அல்லவா, இப்படி ஒரு இயக்கம், எந்த சுயநலமும் இல்லாமல் நாட்டு நலன் மட்டுமே அக்கறை கொண்டு, கட்டுப்பாடோடு இருந்தால், சுயநலக்காரர்களுக்கு கோபம் வராதா ? ஆவேசம் வராதா ? தடை போடத் தோன்றாதா ? அதனால் தான் கழகம் பயப்படுகிறதோ? காமிரேட்ஸ்கள் கதறுகிறார்களோ? பெரியாரிஸ்டுகள் புலம்புகிறார்களோ? தீவிரவாதிகள் அச்சப்படுகிறார்களோ ? ஆம் அதனால் தான் ஆர்எஸ்எஸ் பாரத மாதாவின் ஆசிகளோடு வீர நடை போடுகிறது ? சரியா?
SR.சேகர்