தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14ம் தேதி dmk files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். வெறும் 12 திமுக நிர்வாகிகளிடம் மட்டும் 1.3 லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருப்பதை ஆதாரத்துடன் விளக்கினார்.
அவரது இந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரூ.500 கோடி இழப்பீடு கோரி தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள தலைவர் அண்ணாமலை, கோடிகளில் சொத்து வைத்திருக்கும் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தன்னிடம் ரூ.500 கோடி கேட்பது வேடிக்கையாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஆர்.எஸ் பாரதி, தான் அனுப்பியுள்ள சட்ட அறிக்கையில் திமுகவினருக்கு சொந்தமான ரூ3,478.18 கோடி மதிப்பிலான பள்ளிகளும், 34 ஆயிரத்து 184 புள்ளி 71 கோடி மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களின் மதிப்பு பொய்யானது என தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த வரியில் திமுகவினருக்கு சொந்தமான சொத்துக்கள கட்சியின் சொத்தாக மாறாது என குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாஜக வெளியிட்ட வீடியோவில் இந்த சொத்துக்கள் திமுக நிர்வாகிகளுக்கு சொந்தமானது என்பதை தெளிவாக விளக்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்கட்ட சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் அளிக்க உள்ளதாகவும், சிபிஐ வரும் வரை ஆர்.எஸ் பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.