திமுக எதிர்கட்சியாக இருந்த போது , 2016 முதல் 2021 வரையில் பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதை தான் அக்கட்சியினர் பிரதானமாக எதிர்த்தனர்.
அதில் முக்கியமானது சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை. இதனைத் தவிர சொத்து வரி உயர்வு, மின்சார வரி உயர்வு, பால் விலை உயர்வு, டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் உயிர் பலிகள் ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினர்
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது. அக்கட்சியின் எம்.பி தயாநிதிமாறன், சேலம்-சென்னை எட்டு வழி சாலையை கொண்டு வாருங்கள் என நாடளுமன்றத்தில் பேசினார். வேறு வேறு பெயர்களில் சாலையை அமைக்க துடித்து கொண்டு இருக்கிறார்கள்
தூத்துக்குடியில் ஏற்கனவே இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100 நாட்களாக போராடியவர்களுக்கு ஆதரவு அளித்தனர். மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென பேசினர்.
ஆனால் தற்போது அவர்கள் ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 270 நாட்களாக போராடும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் குரலை காது கொடுத்து கூட கேட்காமல் கூட பாராமுகம் காட்டி வருகின்றனர்
எதிர்கட்சியாக இருக்கும் போது இலவச மும்முனை மின்சாரம் பெறும் விவசாயிகளின் மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்துவதை கடுமையாக எதிர்த்த #திராவிடமாடல் இப்போது சத்தமில்லாமல் அந்த வேலையை செய்து வருகிறது.
அதாவது எதிர்கட்சியாக இருக்கும் போது எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று முழக்கம் வைத்த திராவிடமாடல் தான், தற்போது முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் கிரிமிலேயரை கொண்டுவந்துள்ளது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் தான் கடைசிநாள் சட்டப்பேரவையில் ஸ்டாலின் சம்பவம் செய்தார். தனியார் நிறுவனங்களில் இனி 12 மணி நேர வேலை கட்டாயம் என்ற மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ற காரணத்தை காட்டி இந்த மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி முழகத்தை முன்வைத்து முந்தைய அரசு கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் எதிர்த்து விட்டு தற்போது அதற்கு முரணாக #திராவிட மாடல் செயல்பட்டு வருவது அக்கட்சி எவ்வளவு பெரிய பிராடு கட்சி என்பதை உணர்த்தியுள்ளது . சட்டப்பேரவையில் மைக்கை போட்டு நாங்கள் தான் உலகத்தின் மிகப்பெரிய பிராடு என ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.