திமுக ஆட்சி அமைந்த பிறகு உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் முறைகேடாக பணம் சம்பாதிப்பதாக பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டை சுமத்தி வந்தது. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட #dmkfiles தொகுப்பிலும் இது குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் வெளியான தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உதயநிதியும், சபரீசனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவர் பேசியிருந்தார்.
மேலும் கருணாநிதி தனது வாழ்நாளில் சேர்த்த சொத்துக்களை விட கடந்த ஓராண்டில் உதயநிதியும், சபரீசனும் அதிக சொத்துக்களை சேர்த்துள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்த ஆடியோ வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும், ஆடியோ குறித்து விளக்கமளிக்குமாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனையும், திமுகவின் முதல் குடும்பத்தையும் வலியுறுத்தி வந்தனர்.
திமுகவின் முதல் குடும்பம் தொடர்ந்து ஆப் லைன் மோடில் இருக்கும் நிலையில், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு விளக்கமளித்தார். இது தனது குரல் அல்ல என்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது குரலைப் போன்ற போலியான குரலை உருவாக்கி உள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் இது பிரச்சனையிலிருந்து தப்பிக்க பிடிஆர் பயன்படுத்தும் யுக்தி எனவும், பேசியிருப்பது அவர் தான் என்பது இந்த விளக்கத்தின் மூலம் மேலும் உறுதியாகியுள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.
குறிப்பாக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 1972க்கு பிறகு திமுக செய்யும் ஊழல்கள் குறித்து பேசுவது இதுவே முதல்முறை. உதயநிதியும், சபரீசனும் சேர்ந்து தங்களது கருணாநிதியின் வாழ்நாள் சம்பாத்தியத்தை விட அதிகமாக சம்பாதிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தான் ரத்தத்தை கொதிப்படைய செய்கிறது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் பயன்படவேண்டிய நிதி இவர்களால் சுரண்டப்படுகிறது. ஆடியோபடி “உதய் & சபரி” மட்டும் ஒரு வருடத்தில் குவித்தது 30000 கோடி. இது 2021-22-இல் TASMAC மூலம் கிடைத்த வருவாயில் 83% ஆகும்! இதன் பொருள் என்ன? இவர்கள் இவ்வளவு திருடவில்லை என்றால், டாஸ்மாக்கையே மூடிவிடலாம். கனிமொழி குறிப்பிட்டது போல குறிப்பிட்ட “இளம் விதவைகள்” காப்பாற்றபடுவார்கள்.
மேலும் பழனிவேல் தியாகராஜன் தனது ஆடியோவில், முதல் 8 வினாடிகளில் தான் “உதய் & சபரி” தங்களின் தாத்தாக்களின் வாழ்க்கையில் சம்பாதித்ததை விட அதிக பணம் சம்பாதித்ததாக” கூறுகிறார். எனவே ஆடியோ கிளிப்பில் உள்ள குற்றச்சாட்டுகளை PTR-இன் அறிக்கை உறுதிபடுத்துகிறது என்று தான் அர்த்தமாகும். ஆடியோ உண்மை என்பது நிரூபணமானால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பதவியை விட்டு விலக வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜகவினர் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்துத்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் வலைதளங்களில் உலாவரும் பிடிஆர் ஆடியோவின் உண்மைதன்மை குறித்து ஆராய வேண்டும் என்றும் தடயவியல் சோதனைக்கு அனுப்பி உண்மை தன்மை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.