தமிழ்நாட்டில் பிளஸ்-டூ தேர்வுகள் கடந்த மார்ச்-13ம் தேதி தொடங்கி ஏப்ரல்-3ம் தேதி வரை நடைபெற்றன. இதில் 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் தேர்வு முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் 9.30 மணியை கடந்த பிறகும் தேர்வு முடிவுகள் வெளியாக கால தாமதம் ஆகியது. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் பதற்றத்துக்கு உள்ளாகினர்.
சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக 10.10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. இது குறித்து விசாரித்த போது தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொறுப்பின்றி தாமதமாக வந்ததால், தேர்வு முடிவுகளும் தாமதமாக வெளியிடப்பட்டது தெரிந்தது.
9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் வந்து தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதால் அதிகாரிகளும் வேறு வழியின்றி காத்திருந்தனர்.
பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.