மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பூத் எனப்படும் கிளைகளில் கட்சியை வலுவாக கட்டமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் கிளை தலைவர்களை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கிளை தலைவரின் வீட்டுக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். சக்திகேந்திர பொறுப்பாளர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பின்னர் அவர்களின் வீடுகளில் பாஜக கொடி ஏற்றப்பட்டதுடன் கிளையில் தாமரை சின்னமும் வரையப்பட்டது. மேலும் மாநில தலைவர் அண்ணாமலையின் பாராட்டு கடிதமும் வழங்கப்பட்டது.
இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேலான கிளைகளில், கிளை தலைவர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக கிளை தலைவர்களும், அவரை பாராட்ட சென்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். தங்களது கிளையில் பாஜகவை வலிமைப்படுத்துவோம் என அவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.