புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி செங்கோலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் , அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், மூச்சு இருக்கா ? மானம் ?? ரோசம் ??? என பதிவிட்டிருந்தார். தனது வக்கிர புத்தியை பதிவின் மூலம் வெளிக்காட்டிய மனோ தங்கராஜையும், மு.க ஸ்டாலினையும் இணையவாசிகள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.
மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியை குனிந்து வணங்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள இணையவாசி ஒருவர் மூச்சு இருக்கு, ஆனா மானம் ரோஷம் ஒன்னுமே இல்ல என பதிவிட்டுள்ளார்
இதேபோல மனோ தங்கராஜ் கோவை ஈசாவில், சிவராத்திரி விழாவில் பங்கேற்ற புகைப்படத்தை பகிர்ந்த இணையவாசிகள், மானம், ரோசம் உங்களுக்கு இருக்கா மனோ தங்கராஜ் என எதிர்கேள்வி எழுப்பினர்
மேலும் பல பாஜக நிர்வாகிகள் மனோ தங்கராஜையும் சர்வாதிகாரியையும் கடுமையாக திட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இவ்வாறு பலதரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தனது டிவிட்டை மனோ தங்கராஜ் நீக்கியுள்ளார். இதனை குறிப்பிட்டு அடித்த அடி அப்படி என இணையவாசிகள் நக்கலடித்து வருகின்றனர்.