இரண்டாண்டு சாதனை! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

சமூக விரோதிகள் என்போர் எப்பொழுதுமே சமூகத்தில் இருப்பார்கள். திறமையான ஆட்சியாளர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது கட்டுப்பாட்டில் இருக்கும் இவர்கள், ஆட்சியாளர்கள் திறமையற்றவர்களாக, ஊழல்வாதிகளாக இருந்தால் கிளம்பி விடுவார்கள். கள்ளச் சந்தையில் மது விற்பனை, கஞ்சா விற்பனை, கூலிக்கு கொலை செய்தல் என எல்லா மோசமான விஷயங்களும் இவர்களால் நடக்கும்.
சமூக விரோதிகள் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பு என்பது ஈருடல் ஓர் உயிர் ஆகும். இருபக்க ஆதாய விஷயமாகும். இந்த சமூகவிரோதிகளின் உதவி ஆளும் அரசியல்வாதிகளுக்கு தேவை. ஆளும் அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொண்டு சமூக விரோதிகள் வாழ முடியாது. சமீபத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆட்கள் திருச்சி சிவா எம்.பி. வீட்டில் புகுந்து அங்கு நின்று இருந்த காரையும், வீட்டையும் அடித்து நொறுக்கினார்கள்; முன்பு திமுகவின் முன்னால் அமைச்சர் தா. கிருஷ்ணன் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார், தினகரன் பத்திரிக்கை தாக்கி தீ வைக்கப்பட்டது மூவர் மரணமடைந்தனர். இது போன்ற செயல்களுக்கு கட்சிக்காரர்கள் போர்வையில் இந்த சமூக விரோதிகள்தான் அரசியல்வாதிகளுக்கு தேவைப்படுகிறார்கள். எனவே காவல்துறையினர் வேறு வழியில்லாமல் இந்த சமூக விரோதிகளுக்குப் பணிந்து போவார்கள்.

இது எல்லாவற்றையும் கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் கேட்க முடியாமல் இருக்கிறார்; ஏனென்றால் பல முன்னாள் அமைச்சர்களின் மீதே ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான இதர கட்சிக்காரர்கள், அதிகாரத்தை அனுபவிக்க திமுக கூட்டணியில் மௌனகுருவாக இருக்கிறார்கள். ஏதோ பாஜகவின் அண்ணாமலைதான் சிறிது நம்பிக்கை தருகிறார்.

பெரும்பாலும் திமுக ஆதரவு பத்திரிகைகளான விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகளே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டுள்ளனர் என்றால் நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.


எப்பொழு தெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு கழக கண்மணிகளின் கைகளுக்கு போய்விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
தற்போதும் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி விலை ஏற்றி 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் விற்பது, கஞ்சாவை மொத்த விலையிலும் சிறு சிறு பொட்டலங்கள் ஆக்கி தமிழ்நாடு முழுவதும் சில்லறையிலும் விற்பது, பிரச்சனைக்குரிய விஷயங்களில் குறுக்கே புகுந்து காசை வாங்கிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது, திருட்டு மணல் அள்ளுவது, அனுமதியின்றி கல்குவாரி நடத்துவது என இப்படி முறை தவறிய அனைத்திலும் உடன்பிறப்புகள் பிசியாக இருக்கிறார்கள்.
திமுக பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளன. சென்னை இளைஞர் விக்னேஷ் போலீஸ் கஸ்டடி மரணம், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே மாணவி படுகொலை, பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை, கள்ளக்குறிச்சி அருகே, கனியாமூர் பள்ளி மாணவி மரணம் அதையொட்டி நடந்த கலவரம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 20 நாட்களில் ஆறு கொலைகள். சமீபத்தில் ஊட்டியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது பெண் கஞ்சா போதையில் இருந்த ஒருவனால் கற்பழித்து கொல்லப்பட்டிருக்கிறாள். இந்த பகுதியில் கஞ்சா புழுக்கம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இது போன்ற மாணவிகள் பாலியல் வன்கொடுமையால் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்கின்றனர் அப்பகுதி பெண்கள். அப்பகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டின் பெரும் பகுதியில் நடக்கும் பெரும் குற்றங்களுக்கு மது மற்றும் கஞ்சாவே காரணமாக இருக்கிறது.
‘தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்புதான் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இந்தக் கட்டுரை தயாரித்து கொண்டிருக்கும் வேளையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
தமிழ்நாட்டை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் தி.மு.க அரசின் சாதனை’ என்று சென்ற ஆண்டே சொன்னார் பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் சொன்னதற்கு பிறகும் கூட பல கொலைகள் நடந்து அவர் கூற்றை மெய்ப்பித்துள்ளன.
மத அடிப்படைவாதிகள் எப்பொழுதும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருப்பார்கள். மாநிலத்தில் அமையும் ஆட்சியானது தங்களுக்கு சாதகமானது என்றால் அவர்களின் பாய்ச்சல் அதிகமாக இருக்கும். பொதுவாக திமுக ஆட்சியில் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் பல எல்லைகளை மீறுவார்கள் என்பது வரலாற்று உண்மை. கோவையில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சோதனை சாவடிகள் திமுக வெற்றி பெற்ற உடனேயே இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டன. அதுபோல் தொடர்ந்து கவனித்தீர்கள் என்றால் திமுகவின் ஆட்சியில்தான் அடிப்படை வாதிகளின் அராஜகங்கள் அதிகமாக நடக்கும்; என்ன காரணம், இந்த ஆட்சியாளர்கள் நாம் எதை செய்தாலும் நம்மை காப்பாற்றி விடுவார்கள், நம் ஓட்டுக்காக நம்மை தப்பிக்க பெரிய அளவில் உதவுவார்கள் என்பதால்தான். அப்படித்தான் சமீபத்தில் கோவையில் கார் குண்டு வெடிப்பு நடைபெற்றது; அது பண்டிகை சமயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை நாம் மேலே சொன்னது போல் கார் சிலிண்டர் வெடித்து விபத்து என்று கூறி மூடி மறைக்க எல்லா விதத்திலும் திமுக அரசு பிரயத்தனப்பட்டது. அதுவும் அண்ணாமலை அவர்களால்தான் வெளிப்பட்டது.
பெரும்பாலும் திமுக ஆதரவு பத்திரிகைகளான விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகளே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டுள்ளனர் என்றால் நிலவரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
தட்டி கேட்க யாருமில்லை காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை ஊழல் நடைபெறுகிறது. வெகு வேகமாக அள்ளி குவிக்கிறார்கள். அதிகாரிகள் மட்டத்தில் அதேபோன்று லஞ்சம் வசூலிப்பதும் அமைச்சர்களிடம் கப்பம் கட்டுவதும் நடந்து வருகிறது. இது எல்லாவற்றையும் கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் கேட்க முடியாமல் இருக்கிறார்; ஏனென்றால் பல முன்னாள் அமைச்சர்களின் மீதே ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான இதர கட்சிக்காரர்கள், அதிகாரத்தை அனுபவிக்க திமுக கூட்டணியில் மௌனகுருவாக இருக்கிறார்கள். ஏதோ பாஜகவின் அண்ணாமலைதான் சிறிது நம்பிக்கை தருகிறார். ஆனால் அவரே எப்படி எல்லா இடத்திலும் நின்று முறைகேடுகளைத் தடுக்க முடியும் ? அது முடியாது; அவர் குரல் கொடுக்கதான் முடியும். எல்லா இடத்திலும் அவரே நின்று தடுக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால், ஸ்டாலின் இடத்தில் அவர் இருக்க வேண்டும். இதுதான் தமிழ்நாட்டின் நிலை.

-ராணா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top