தி.மு.க. ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில், புரிந்த மாபெரும் சாதனை, அநாகரிகமான பேச்சுக்களால் மக்களை அவமதித்ததுதான். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளட்டவர்களின் பேச்சும், கட்சியின் மூத்த உறுப்பினர்களின் பேச்சும் அநாகரிகத்தின் உச்சக் கட்டம்.
கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குவது பற்றிய அமைச்சர் துரைமுருகனின் சமீபத்திய கொள்கை விளக்கப் பேச்சு இது, “நீ பசங்களோடு சினிமாவுக்கு போனா பெத்தவங்க கிட்ட பணம் கேட்காதே… ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசா பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு. அதுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்குறோம்” இந்தப் பேச்சு கடும் கண்டனங்களை உருவாக்கியது.
திமுக அரசின் திட்டத்தால் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்றும், ‘கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை பார்த்து, இப்போ பஸ்சில் எப்படி போறீங்க, இங்கிருந்து எங்கே போக வேண்டுமானாலும் ஓசி பஸ்சில் தானே போறீங்க என்று நக்கலாக பேசினார் பொன்முடி.. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது “ஏம்மா…நீ எஸ்.சி தானே…” என்று மேடையிலே சாதியை குறித்து பேசினார். அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், குறைகளை சொன்ன ஒரு பெண்ணைப் பார்த்து, வாயை மூடு என அதட்டினார்,
அமைச்சர் ராஜகண்ணப்பன் பி.டி.ஓ ஒருவரை அவரின் சாதியைச் சொல்லித் திட்டினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், போக்குவரத்துறை அமைச்சராக இருந்த அவர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
அமைச்சர் எ.வ.வேலு போக்குவரத்து வாகனங்கள் கூடிவிட்டன, சாலையை விரிவாக்கம் செய்யப் போனால் நிலம் இல்லாதவன் கூட, ஒரு பச்சைத் துண்டு போட்டு கொண்டு நிலத்தை எடுக்க கூடாது என்கிறான் என்று விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசினார்.
காவல்துறை அதிகாரியை புகழ்ந்து பேசுவதாக நினைத்துக் கொண்டு ”அவரின் திறமை என்னவென்றால், ஒருவரைக் குற்றவாளியாக ஆக்கவும் முடியும், குற்றவாளிப் பட்டியலிருந்து நீக்கவும் முடியும். அவர் இப்போது என்னுடன் தான் இருக்கிறார் என அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக பேசியவர் அமைச்சர் கே.என்.நேரு.
துரை முருகன் கலந்து கொண்ட ஊட்டி நிகழ்ச்சி ஒன்றில், ‘ஏம்ப்பா மூணு மினிஸ்டருங்க மீட்டிங்ல உட்கார்ந்திருக்கோம். ரெண்டு முறை கரன்ட் கட்டாகுதுன்னா என்ன அர்த்தம்… நாளைக்கு காலையில வெளியூருக்குக் கிளம்பத் தயாரா இரு” என எச்சரிக்கும் தொனியில் இ.பி அதிகாரிகளிடம் பேசினார்.
ஜன. 28 அன்று சேது சமுத்திர திட்டம் குறித்து திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் டி. ஆர். பாலு, “திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது யாரேனும் கை வைத்தால் அவரின் கையை வெட்டுவேன், எனக்கு அதற்கான பலம் இருக்கிறது” என்றார். திமுக எம்.பி., தயாநிதி மாறன்“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவை தங்கள் அம்மா (அம்மா) என்றும், மோடி அவர்களை ‘அப்பா’ என்றும் கூறுகிறார். அவர்களுக்கிடையே இருக்கும் உறவைப் பாருங்கள். இதைச் சொன்னால், அவர்கள் (அதிமுக) பெரும் கூச்சலிடுவார்கள் என்றார்.
2ஜி ஊழல் புகழ் ஆராசா. செப்டடம்பர் 6-ந் தேதி திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன், ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன், எத்தனை பேர்கள் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று அடாவடியாக தனது இந்து வெறுப்பை உமிழ்ந்தார்.
தமிழக ஆளுநரைப் பற்றி தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, அரசு கொடுத்த உரையை ஒழுங்காக படித்திருந்தால் ஆளுநரை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி இருப்பேன். ஆனால், அவர் டாக்டர் அம்பேத்கர் பெயரையே சொல்லமாட்டேன் என்று தவிர்த்தால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கா இல்லையா? அம்பேத்கர் பெயரை சொல்லமாட்டேன் என்று சொன்னால் ஆளுநர் காஷ்மீருக்கு செல்லட்டும்; நாங்களே தீவிரவாதிகளை அனுப்பி சுட்டு கொல்வோம் என்றார்.
ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தொலைக்காட்சியினர் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். “இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க.. அவனுக மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே எவனும் கிடையாது. பம்பாயில இருக்கும் ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறானுக கம்பனிய..காசு வருதுங்கிற காரணத்துக்காக எதை வேணா கிளப்பிவிடுறது” என்று குறிப்பிட்டார்.
இது மட்டுமில்லாமல், பா.ஜ.க.வில் உள்ள பெண்களை ஐட்டம் என கீழ்தரமாகவும் பேசினார் சைதை சாதிக். ஆபாசப் பேச்சுக்களும் அடாவடிப் பேச்சுக்களும் திமுகவின் இரண்டாண்டு சாதனைப் பட்டியலில் அவசியம் இடம் பெறும்.
- ஈரோடு சரவணன்