கடவு சீட்டு முடக்கப்பட்ட பின்னரும், ராகுல்காந்தி தற்காலிகமாக ஒரு கடவுச் சீட்டு பெற்று 10 நாள் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார். மார்ச் மாதம் இங்கிலாந்து பயணத்தின் போது அள்ளித் தெளித்த அநாகரிக கருத்துக்களுக்கு இன்னும் முழுமையாக விளக்கம் கொடுக்காமல், அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல்காந்தியின் அமெரிக்க பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும்.
அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்புகளின் மையங்களே விழா ஏற்பாடுகளை செய்கிறார்கள். இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில், அமெரிக்காவிற்கான இஸ்லாமிய மையம், சமூக நீதிக்கான வட-அமெரிக்க கவுன்சிலின் இஸ்லாமிய வட்டம், (ISNA) இந்த அமைப்புகளுடன் மஸ்ஜீத் அல்-வாலி,யின் அமைப்பாளர் தஸீம் அன்சாரி, ஜவாத் சயீத், ஹபீப் சித்திக், முகமது அஸ்லம், ஹசீஸ் காஸி போன்றவர்களும் அடங்குவார்கள். மேற்படி அமைப்புகள் 2014 முதல் அமெரிக்காவில் மோடிக்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர்கள், 2008-ல் குஜராத் முதல்வராக இருந்த போது, அமெரிக்கவிற்கு வருவதற்கு மோடிக்கு விசா வழங்க கூடாது என கூச்சல் போட்டவர்கள். இனப்படுகொலைக்கு எதிரான கூட்டணி என்ற பெயரில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகளும் இதில் உள்ளன. சில அமைப்புகளின் பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
Association of Indian Muslims of America, American Federation of Muslims of Indian origin, coalition for a secular and Democratic India, Indian Christian Forum, Indian Muslim Eductional Foundation of North America, Indian Musilm council of USA, World Tamil Organistion, The Council on American Islamic Relations இந்த அமைப்புகளின் பின்னணியை தெரிந்து கொண்டால், ராகுல்காந்தியின் நோக்கம் நன்றாகவே புரிந்து கொள்ளமுடியும்.
ராகுல் காந்தியின் நிகழ்வின் சில ஒருங்கிணைப்பாளர்கள் பாகிஸ்தானின் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய முன்னணிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தன்சீம் அன்சாரி,
பல்வேறு பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்புகளில் தொடர்புடையவர் என்று தெரிய வருகிறது! இதில், இந்திய எதிர்ப்பு இயக்கங்கள் அதிகம்!
வட அமெரிக்காவின் இஸ்லாமிய வட்டம் 1971ல் இந்து இனப்படுகொலைக்கு நேரடியாகப் பொறுப்பான ஜமாத்-இ-இஸ்லாமி தொடர்பான உறுப்பினர்களால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. எப்போதும் காஷ்மீர் துயர முழக்கத்தைப் பயன்படுத்தி, ICNA அமெரிக்காவிடம் இருந்து நிதியைப் பெற்று, தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஜமாத்-இ-இஸ்லாம் (JeI) மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய முன்னணிகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஜூன் 4 ஆம் தேதி ராகுல் காந்தியின் நியூயார்க் நிகழ்வை நடத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர், முகமது அஸ்லாம் கிரேட்டர் பிரின்ஸ்டன் முஸ்லீம் மையத்தின் (MCGP) உறுப்பினராக உள்ளார். இது வெளிப்படையாக ICNA இன் மற்றொரு நெருங்கிய கூட்டாளியாகும். இவர் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுவான ஸ்டூடண்ட்ஸ் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) நிறுவனரும் ஐசிஎன்ஏ உறுப்பினரும் ஆவார்.
தவிர, மின்ஹாஜ் கான், ராகுல்காந்தியின் நிகழ்விற்கு சுயமாக நியமிக்கப்பட்ட மற்றொரு ஒருங்கிணைப்பாளர், இந்திய எதிர்ப்பு பரப்புரைக் குழுவான இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சிலுடன் (IAMC) தொடர்புடையவர். IAMC மனித உரிமைகள், மத சுதந்திரம் மற்றும் இந்தியாவில் வகுப்புவாத அமைதியின்மையை தூண்டுவதற்காக போலி செய்திகளைப் பகிர்வதன் மூலம் இந்தியாவை இடைவிடாமல் வைத்து வரும் இயக்கம், இவர்கள் இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதாகவும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைப்பது மட்டுமில்லாமல், இதற்காக செமினார் நடத்துவதும், மேற்படி செமினாருக்கு இந்தியாவிலிருந்து இடதுசாரிகள் முற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை அழைப்பது வாடிக்கையானது. இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் தான் ராகுல்காந்தியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.
2002-ல் துவக்கப்பட்ட இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் தொடர்ச்சியாக தவறான, பொய்யான செய்திகளையே பரப்புகிறது. பழமையான காசியுள்ள ஞானவாபி மசூதியில் உள்ள இந்து கடவுளை வழிபடுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி கோரிய மனுவை எதிர்த்து, முஸ்லிம்கள் தொடுத்த மனுவை உத்தரப்பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இது முஸ்லிம்களின் உரிமையை பறிப்பதாகும் என்றும் மோடி ஆட்சி சிறுபான்மையினரைத் துன்புறுத்தியதில் பைடன் நிர்வாகம் ஆபத்தான மௌனம் கடைப்பிடிக்கிறது என்றும், இந்தியாவில் முஸ்லிம் குடிமக்களுக்கு எதிராக தேசிய அளவில் இனப்படுகொலை செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது என்றும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் 42 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், மசூதிகள் மற்றம் முஸ்லிம்களின் கடைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் செய்திகளை திரித்தும் பொய்யாகவும் வெளியிட்டு வருகிறது. இவர்கள் ஏற்பாடு செய்கின்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி என்ன பேசுவார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நிதி முறைகேட்டிலும் மேற்படி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் கனடா அதிகாரிகள், ISNA நிறுவிய ஜாமி மசூதி, ஹிஸ்புல் முஜாஹிதீனுடனும், ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்புடையது என்றும் காஷ்மீரி முஸ்லிம்களுக்கான நிவாரண அமைப்புக்கு (என ROKM) $280,000 நிதியை பெற்று, பயங்கரவாத செயல்களுக்கு மேற்படி நிதியைப் பயன்படுத்தியதைக் கண்டறிந்தனர். இதன்காரணமாக ISNA கனடாவின் தொண்டு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்தியாவிற்கு எதிரான செய்திகளை குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஆதரவான செய்திகளை தொர்ச்சியாக வெளியிட்ட, வயர், நியூஸ்லாண்ட்ரி, ஸ்கரோல், கேரவான போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த அமைப்பு இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில். இந்திய விரோத சக்திகள் இணையும் மையப் புள்ளியாக ராகுல் உருவாகிறார். இது காங்கிரசுக்கும் நல்லதல்ல, நாட்டிற்கும் நல்லதல்ல!
– ஈரோடு சரவணன்