ஹிந்து ஆலயங்கள், அது எங்கள் கலாச்சாரத்தின் தொன்மம். கட்டிடங்களிலே உலகம் வியக்கும் நுன் கலையை வடித்தார்கள் எம் முன்னோர்கள். பக்தியையும், பண்பாட்டையும் மக்கள் இன்பத்தோடு வாழ அறத்தையும், கலைக்கும், பண்பாட்டிற்கும் ஊறு என்றால் மறத்தையும் பயிற்றுவித்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நம் மூதாதையர்கள்.
பாண்டியர்களும், சோழர்களும் மங்காப்புகழ் கொண்டது போர்க்களங்களில் பல வெற்றிகள் பெற்றதினால் மட்டுமல்ல. அவர்கள் வானுயர, இறைவனுக்கு எழுப்பிய பிரம்மாண்ட ஆலயங்களாலும்தான் என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்தது.
அத்தைகைய பெரும் புகழும், பண்பாட்டுச் சிறப்பும் கொண்ட எம் தமிழக ஆலயங்களின் இன்றைய நிலை “குரங்கு கையில் பூமாலையாய்” சிக்கித் திணறி சின்னா பின்னமாகி உள்ளது பெரும் கவலைக்குறியது. திராவிட மாடல் அரசின் அடிப்படைச் சித்தாந்தமே ஹிந்து கடவுள் மறுப்புதான் என்பதை இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் நமக்கு தெரிவிக்கிறது.
இவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
காலம் காலமாய் பின்பற்றப்படும் ஆலயங்களில் உள்ள வழிபாட்டு முறைகளை தடுத்து வருகின்றனர்.
* தருமை ஆதின பல்லக்கு நிகழ்ச்சியை தடுக்க முனைந்து மூக்கு ஒடிந்தது.
* மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தை ஆக்கிரமிக்க நினைத்து, அசிங்கப்பட்டது.
* திருச்செந்தூர் முருக பக்தர்கள் பாதயாத்திரைக்கு இடைஞ்சல் விளைவித்தது.
* கோவில் வளாகங்களுக்குள் கோவில் அதிகாரிகள் செருப்போடு வலம் வருவது, தங்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை உள்ளே நிறுத்துவது.
அரசு கையில் உள்ள ஆலயங்கள் அந்ததந்த மண் சார்ந்த மக்களின் கையிலே போகவேண்டும். அப்படி போனால்தான் இந்த ஹிந்து மத வெறுப்பு கொண்ட கும்பலிடமிருந்து ஆலயங்களும், ஆகமங்களும், ஆலய சொத்துக்களும் பேணிப் பாதுகாக்கப்படும். இதை நிறை வேற்றித்தருவது நம் கடமை.
* ஆகமத்திற்கு எதிராக கோவில் வளாகங்களுக்குள் மருத்துவ முதலுதவி மையம் அமைத்தது.
* பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கியது.
* கிறிஸ்தவர்களுக்கு கோவிலுக்குள் திருமணம் செய்துகொள்ள அனுமதியளித்தது.
* கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை அறநிலையத்துறை அதிகாரிகளின் படா டோப செலவிற்காக பயன்படுத்துதல். உதார ணமாக, சமயபுர கோவில் நிதியிலிருந்து இன்னோவா கார் வாங்கியது. தஞ்சையில் இணை ஆணையர் மாளிகைக்கு toilet closet மாற்றியது.
* ராஜ ராஜ சோழனின் சதய விழாவினை அரசு விழாவாக அறிவித்து மாமன்னன் பெயரை ராச ராச சோழன் என அரசியலைப் புகுத்தியது.
* தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் தமிழில் குட முழுக்கு செய்துவைத்து அங்கும் மொழி அரசியலை நுணுக்கமாய் புகுத்தியது.
* அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பெயரில் முறையான பயிற்சியில்லாமல், போதிய ஞானம் இல்லாதவர்களை ஏற்கனவே அர்ச்சகர்கள் இருக்கும் கோவிலுக்குள் அமர்த்தி ஹிந்து கலாச்சாரத்தை அழிக்கும் வேலையை செய்வது.
* திருவாரூர் கோவில் பிரகாரத்திற்குள் அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு வாடகைக்கு விட்டது.
* தில்லை நடராஜர் கோவிலை ஆக்கிரமிக்க முயற்சித்து எதேச்சதிகார நடவடிக்கையில் இறங்கி தீக்ஷிதர்களை துன்புறுத்துவது.
* கன்யாகுமரி திருவட்டார் கோயில் கும்பாபிஷேகத்தின் போது ஊர்மக்கள் கட்டிய காவிக் கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
* கன்யாகுமரி மண்டைக்காடு சமய மாநாட்டை தடுக்க நினைத்தது. அதன்பின் ஹிந்துக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அரசே வந்து அந்த சமய மாநாட்டை நடத்திக்கொடுத்தது.
* தனியார் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு ஆலயங்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவருவது. சமீபத்திய உதாரணம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
* பழனி முருகன் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு முன் ” ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், அவரின் சிபாரிசில் சிலர் கற்ப கிரகத்திற்குள் சென்று தரிசித்தது.
* தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை நடத்தி அவர்களுக்கு ஆதரவான வணிக நோக்கமுடையவர்களை திட்டமிட்டு திரட்டிவந்து கூட்டம் நடத்தியது, உண்மையான ஆன்மிகவாதிகள் ஒன்று திரண்டு கேள்வி கேட்க, சுகிசிவம் என்ற ஆன்மிக சொற்பொழிவாளர் வாயடைத்துஓடிப்போனது.
திருக்கோவில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புடைய சொத்துக்களை மீட்டதாக சொல்லும் அமைச்சர் , அதில் திமுகவினரிடமிருந்து மீட்டது எத்தனை என்பதை சொல்ல மறுப்பது?
ஹிந்து அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்துகொண்டு, கிறிஸ்தவ விழாவில் பங்குகொண்டோமா அவர்கள் கொடுக்கும் கேக்கை சாப்ட்டோமா என இல்லாமல் அமைச்சர் ” அல்லேலூயா’ ‘அல்லேலூயா’ என ஹிந்துக்களை வெறுப்பு ஏற்றுவதாக நினைத்து தனது தரத்தைத் தானே தாழ்த்திக்கொண்டது.
நமது கலாச்சாரமும், ஆலயங்களும் பல நூறு ஆண்டுகாலமாய் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பல அந்நியர்களால் சிதைக்க முனைந்த போதெல்லாம், அவர்களை வென்று, இன்னும் பல மடங்கு வீரியம் கொண்டு எழுந்து விரிந்து பரந்து வியாபித்தித்தது நம் ஆலய வழிபாடு.
அரசு கையில் உள்ள ஆலயங்கள் அந்ததந்த மண் சார்ந்த மக்களின் கையிலே போகவேண்டும். அப்படி போனால்தான் இந்த ஹிந்து மத வெறுப்பு கொண்ட கும்பலிடமிருந்து ஆலயங்களும், ஆகமங்களும், ஆலய சொத்துக்களும் பேணிப் பாதுகாக்கப்படும். இதை நிறை வேற்றித்தருவது நம் கடமை.
இந்த திராவிட கும்பலால் சிலைகளை சிதைக்க முடியும், சிலைகளை திருட முடியும், சில வணிக ஆன்மீகவாதிகளை விலைக்கு வாங்கி இங்குள்ள ஆகம முறைகளை மாற்ற முயற்சிக்க முடியும். இது எல்லாம் ஒரு கிரஹணம் போல்தான், சில மணிநேர பீடை.
-நா. பாஸ்கரன்