நீட்டின் ரகசியம் தெரியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று நாடெங்கும் பேசிவிட்டு எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவழிக்க திட்டமிட்டதால், கையெழுத்திட பேனா கிடைக்காமல் இரண்டாம் ஆண்டு இறுதியில் சட்டப் போராட்டம்தான் ரகசியம் என்று முத்து உதிர்த்து மூன்றாம் ஆண்டு நீட் தேர்வு நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல் சாதனை. முரசொலி அறிக்கை போல் ஏ கே ராஜன் குழு அமைத்து நீட்டை ரத்து செய்ய இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, இதற்கு தீர்வு நீதிமன்றத்தில் என அறிந்தும் தவறான கதவாக ராஜ்பவனை தட்டி பொறுப்பை தட்டி கழித்தது அடுத்த சாதனை.
குறிப்பிட்ட பள்ளிகளின் மேல் பாலியல் புகார் ஏற்படும்பொழுது பாரபட்சமாக நடந்து கொண்டது அடுத்த சாதனை. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனக் கூறி இல்லம் தேடி கல்வி, மாலை நேர பயிற்சி, அந்தந்த மாவட்ட பாரம்பரிய கலைகளை கற்றுத்தருதல், மாதிரி பள்ளிகள் அமைத்தல், உறைவிட பள்ளிகள் அமைத்தல், ஏற்கனவே நடைமுறையில் இருந்து விரிவுபடுத்தும் திட்டத்தில் இருந்த மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் என பல திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி நடைமுறைப்படுத்தியது பெரிய சாதனை. மூன்று வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டிய பள்ளிகளின் உரிமத்தை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும் என மாற்றியது ஒரு சாதனை. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது மாணவர்களுக்கு கொரோனா தொற்றின் காரணமாக தேர்வு எழுத விலக்கு வேண்டும் என்று போராடிவிட்டு தான் ஆட்சிக்கு வந்ததும் நேரடியாக தேர்வு எழுத வேண்டும் என்ற ஆணையிட்டு மாணவர்களின் வேண்டுகோள்களை புறக்கணித்தது சாதனை.
தொடர்ந்து தமிழ் எங்கள் மூச்சு, உயிர் என்று பேசிவிட்டு, பல்வேறு நிறுவன ஆய்வுகளில் தமிழகப் பிள்ளைகள் தாய்மொழி வள ஆளுமையில் 23ஆம் இடத்தில் இருப்பது தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பது சாதனை.
திருநெல்வேலியில் ஒரு தனியார் பள்ளி சுற்றுச்சுவர் விழுந்து மாணவர்கள் இறந்த பொழுது தமிழகத்தின் எல்லா பள்ளிகளின் உறுதித்தன்மையை சோதிக்க ஆணையிட்டு, அரசு பள்ளிகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக உறுதியற்ற தன்மை இருப்பது தெரிந்ததும் அமைதியானது ஒரு சாதனை. தொடர்ந்து தமிழ் எங்கள் மூச்சு, உயிர் என்று பேசிவிட்டு, பல்வேறு நிறுவன ஆய்வுகளில் தமிழகப் பிள்ளைகள் தாய்மொழி வள ஆளுமையில் 23ஆம் இடத்தில் இருப்பது தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பது சாதனை. தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம் என ஆன பிறகும் சிறுபான்மை மத, மொழிப் பள்ளிகள் நீதிமன்றம் சென்று விலக்கு பெற்று தமிழ் இல்லாமல் பள்ளிப்படிப்பை முடிக்க உறுதுணையாக இருப்பது சாதனை.
பெண்களின் இடுப்பை பற்றி பேசும் நல்ல ஆசிரியரை பாடநூல் கழகத்தின் தலைவர் ஆக்கி, ஆறாம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என படத்தோடு
பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் இல்லாமல் மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம் ஏற்பட்டு அதற்கு தலைமை ஆசிரியர்கள் தண்டனை பெறுவது சாதனை. மதத்தின் குறியீடுகளை அணியக்கூடாது என்று இந்து பிள்ளைகளை தண்டித்து அதை பெற்றோர்களும் ஊடகமும் வெளிக்கொண்டு வந்தும் நடவடிக்கை எடுக்காதது சாதனை. பிள்ளைகளுக்கு பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் போனாலும் அன்பழகனுக்கு பள்ளி வளாகத்தில் சிலை கட்டாயம் வேண்டும் என்று அமைப்பது சாதனை. பெண்களின் இடுப்பை பேசும் நல்ல ஆசிரியரை பாடநூல் கழகத்தின் தலைவர் ஆக்கி, ஆறாம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி என படத்தோடு மாணவனுக்கு போதிப்பது சாதனை. கடந்த ஆட்சியில் அனுமதி பெற்று ஒரே வருடத்தில் 60% மத்திய அரசு உதவியுடன் இந்த ஆட்சியில் துவங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிக்கும் தாம் தான் காரணம் என வெட்கமில்லாமல் மார் தட்டுவதும் ஒரு சாதனை. தமிழ் செம்மொழியாக்கியது நாங்கள் தான் என்று சொல்லி, மைசூரில் ஒரு வளாகத்தில் இரண்டு ஆராய்ச்சியாளர்களோடு விட்டுவிட்டதை மத்திய அரசு சென்னையில் ஒரு லட்சம் சதுர அடியில் பல மாடிகளோடும் அனைத்து வசதிகளோடும் 11 ஆராய்ச்சியாளர்களோடும் கட்டி முடித்து துவக்கும் பொழுது தாமே சொந்தமாக செய்தது போல தமிழக மக்களை நம்ப வைக்க முயற்சிப்பது ஒரு சாதனை.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் மீண்டும் நேரடியாக நடக்கும் எனக் கூறி பின்னர் எப்பொழுதும் போல நடக்கும் என குழப்பியது ஒரு சாதனை. பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும், தொகுப்பு ஊதியத்தில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்து இப்பொழுது மீண்டும் தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நீட்டிக்க செய்திருப்பது சாதனை. நாங்கள் வந்தால் டெட் தேர்வுகளை நீக்குவோம் எனக்கூறி இப்பொழுது அதற்கு பிறகு ஒரு முறை நடந்து முடிந்து, ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்போருக்கு பணி வழங்காமல் ஏமாற்றி அவர்களை போராட்டத்தில் நடுத்தெருவில் உட்கார வைத்திருப்பது ஒரு சாதனை.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்விற்கு 50,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்றதும் 3% வகுப்புக்கு வந்த மாணவர்கள் தேர்வு எழுதலாம், வீட்டிற்குச் சென்று அழைத்து வந்து தேர்வு எழுத வைக்க முயற்சி, மறு தேர்வு நடத்தப்படும், மாணவர்கள் தொழிற்கல்வி சேர்ந்து விட்டனர் என்று வகை வகையாய் அளந்துவிட்டது சாதனை. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் வரவில்லை என்பது ஒரு சாதனை.
2018-~19 ஆம் ஆண்டு வரை 12, 10-ஆம் வகுப்பின் தேர்வின் முடிவுகள் பள்ளிக்கல்வித்துறையின் இணைய பக்கத்தில் அரசு பள்ளிகள், ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அறநிலைத்துறையில் கீழ் உள்ள பள்ளிகள், தனியார் பள்ளிகள் என தேர்வு முடிவுகளும் ஒவ்வொரு 10 மதிப்பெண்கள் இடைவெளியில் 490 முதல் 500 வரை, 480 முதல் 490 வரை உள்ளவர்களில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றினார்கள் என்று குறிப்பிடுவது வழக்கம். அது இருந்தால்தான் எந்த பகுதியில் எந்தப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பிள்ளைகள் பெற்றார்கள், அதை எப்படி சரி செய்வது, தொழில்நுட்பக் கல்லூரியில் கட் ஆப் எத்தனை இருக்கும், மாணவர்கள் சேர்க்கை எப்படி இருக்கும் என்று கல்வியாளர்களால் கணிக்க முடியும். அப்படி செய்தால் தங்கள் தோல்வி வெளிப்படும் என முழு பூசணியை சோற்றில் மறைத்தது ஒரு சாதனை.
முடிவாக முத்தாய்ப்பாக முத்துவேல் கருணாநிதியின் தமிழ் தொண்டை பாடமாக்குவோம் எனக் கூறி செயலில் இறங்கி உ வே சுவாமிநாதையர், பாரதியார், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தி இலக்கியங்கள் வளர்க்காத தமிழை இவர் வளர்த்தார் என நிலைநாட்டுவது திராவிட மாடலின் சாதனை. அதனை கண்டு தமிழக மக்களும் நாமும் வாய் பொத்தி இருப்பது வேதனை.
-முனைவர் இரா. காயத்ரி சுரேஷ்