நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 39வது பிறந்தநாள். இதை அடுத்து மாநிலம் முழுவதும் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி பாஜக தொண்டர்கள் விளம்பர பலகைகள் வைத்தும் போஸ்டர்கள் அடித்தும் கொண்டாடினர்.
தங்களது ஹீரோவாக ஜொலிக்கும் அவரது பிறந்தநாளை இளையோர் பட்டாளம் கொண்டாடி தீர்த்தது.
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் ஆகச் சிறந்த தலைவராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் அவரின் வருகை தமிழ்நாடு அரசியலை புரட்டிப் போட்டுள்ளது.
குறிப்பாக தீயசக்தி திமுக தலைமை அண்ணாமலையை கண்டு அஞ்சி நடுங்குகிறது. அண்ணாமலை என்ற பெயரை கேட்டாலே பாதி திமுகவினர் போலீசை கண்ட திருடனாய் ஓடுகின்றனர்.
இத்தகைய தலைவனின் பிறந்தநாளை பாஜக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடினர். நேற்று நாள் முழுவதும் ஹாப்பி பர்த்டே அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரண்டு ஆக இருந்தது.
கட்சியின் கடைக்கோடி தொண்டனையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்தும் தங்கள் தலைவனை, கட்சி தொண்டர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். தேச சேவையில் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்