பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கடந்த 10.06.2023 அன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 24 முக்கிய மற்றும் திரைபிரபலங்கள் வந்து சந்தித்து சென்றது திமுக அரசுக்கு கடும் அதிர்வினை அளித்துள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு நிகழ்த்திய சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் இந்தியா முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வேலூரில் கடந்த 11.06.2023 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 10.06.2023 அன்று இரவு தமிழகம் வந்தடைந்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கு, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள பிரபல விடுதியில் தங்கிய அமித்ஷா அரசியல் சாராத 24 பிரபலங்களை சந்தித்தார் அவர்களின் பட்டியல் :
1. பத்ம ஸ்ரீ விருது பெற்ற அனிதா பால்துரை
2. அப்பல்லோ மருத்துவமனை பிரித்தா ரெட்டி
3. விஜய்குமார் ரெட்டி
4. டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் ஏ.சி.சண்முகம்
5. நல்லி நிறுவனத்தின் நல்லி குப்புசாமி
6. எஸ்.ஆர்.எம். பாரிவேந்தர் பச்சமுத்து
7. ரவி பச்சமுத்து
8. ஆர்காடு நவாப் நிறுவன நவாப் முகமது அப்துல் அலி
9. நவாப்சத முகமது ஆசிப் அலி
10. செட்டிநாடு சிமெண்ட் மாமர் முத்தையா
11. இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்
12. பி.எஸ்.ராஜன்
13. கிரிக்கெட் வீர்ர் சிவராமகிருஷ்ணன்
14. ஹாக்கி விளையாட்டு வீரர் பாஸ்கரன்
15. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
16. வின் டிவி தேவநாதன்
17. டெபிளட்ஸ் இந்தியா ஜெய் கிஷான் ஜாவீர்
18. பி.கே.எப் சாதனா கிருஷ்ணன்
19. இயக்குனர் அசோசியேசன் ஆர்.கே. செல்வமணி
20. திரைப்பட இயக்குனர் ஏ.ஆர், ராஜசேகரன்
21. வேல்ஸ் பல்கலைகழகம் ஐசரி கணேஷ்
22. ஓ.ஹெச்.எல். தாஜ் குரூப் பிரமோத் ராஜன்
23. திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்
24. அப்போலோ டெண்டல் & டயாலிசிஸ் ஜி.எஸ்.கே வேலு
இதில் சிலரது சந்திப்பு இயல்பாகத் தோன்றினாலும் பலரது சந்திப்பு அரசியல் பிரமுகர்களின் புருவங்களை உயர வைத்துள்ளது!