பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அதிமுக ஊழல் பற்றிய யதார்த்த உண்மை ஒன்றை ஒரு கேள்விக்குப் பதிலாகக் கூற அதைப் பிடித்துக் கொண்டு அண்ணாமலையை தவறாக விமர்சித்தார் அதிமுகவின் ஜெயக்குமார். ஜெயக்குமாருக்கு பாஜக வின் கரு நாகராஜன் கண்டனம் தெரிவிக்க, அதன் நியாயத்தை புரிந்து கொள்ளாத அதிமுக அதன் செயற்குழுவில் பாஜக வுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்ததோடு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி உள்ளது. அதிமுகவின் தீர்மானத்திற்கு மிகத் தெளிவாக பதில் அளித்துள்ளார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவரது அந்த பதில் இங்கே இணைக்கப் படுகிறது.