வைரமுத்துக்கு அரசு வீடா ? கொதிக்கும் இலக்கிய சங்கங்கள்

தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு வீடு வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல், கடும் கண்டனத்தை வரவழைத்திருக்கிறது.

‘ஞானபீடம், சாகித்ய அகாடமி’ போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற, தமிழக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டது.

இதற்காக, அவர்கள் வசிக்கும் மாவட்டம் அல்லது விரும்பும் மாவட்டத்தில், வீடு வழங்கும், ‘கனவு இல்லம்’ திட்டத்தை, 2021ல், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சாகித்ய அகாடமி விருது பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி, எம்.பி., வெங்கடேசன், ராமகிருஷ்ணன் உட்பட, 16 பேருக்கு வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இவர்கள் யாரும் ஏழைகள் அல்ல, இவர்களை கெளரவிக்க வீடு வழங்குவதா என்று கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தான் தங்கள் கட்சியின் புகழ்பாடு்ம் வைரமுத்துக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், வீடு ஒன்று வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து கண்டனங்களும் எழுந்துள்ளன.

‘வசதி படைத்த வைரமுத்து போன்ற எழுத்தாளர்களுக்கு, வீடு வழங்குவதற்கு பதிலாக, ஏழ்மை நிலையில் உள்ள எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கலாம்’ என, சமூக வலைதளங்களில் இலக்கிய சங்கங்களைச் சேர்ந்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கனவு இல்லம் திட்டத்தில், தமிழக அரசின் உயரிய இலக்கிய விருதுகளான, திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் விருதுகளைப் பெற்றவர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என, இலக்கிய சங்கங்களில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் “வைரமுத்து வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு?  2006-ல் சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் வாங்குன பெரிய மனுசன். அந்த படமே அரசு மானியதுத்துல எடுத்ததுதான். இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா?” என்றும், மற்றொரு டிவிட் ஒன்றில் ”கவிஞர் வைரமுத்துக்குச் சொந்தமாக சென்னை பெசன்ட் நகர், திருவான்மியூரில் உள்ள 3 வீடுகளின் முகவரி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு “கவிஞருக்கு இந்த மூணு வீடு போதாதா? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு? யார் அப்பா வீட்டு பணம்? ” என பதிவிட்டுள்ளார். நியாயம்தானே..?”

பதினேழுக்கும் மேற்பட்ட பாலியல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவருக்கு வீடு வழங்குவது தான் திராவிட மாடலா என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top