18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பாஜக ஆட்சியில் மத்திய அரசு செயல்திறன் மிக்க அரசாகவும், பொருளாதார மற்றும் சமூக நலன் சார்ந்து வளர்ச்சியை முன்னெடுக்கும் அரசாகவும் உள்ளது.
இந்திய அரசின் புதிய அடையாளமாக இந்த ரோஜ்கர் மேளா திகழ்கிறது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள், நிதி சேவை, பள்ளிகள், கல்வி, உயர்கல்வி, வருவாய், பாதுகாப்புத்துறை, ரயில்வே மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்துள்ளனர்
ஒட்டுமொத்த உலகமும் இன்று இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றன. அதிகளவு நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளதால், உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன, ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என பேசினார்.
மேலும் பணம் கொடுத்து வேலை வாங்குவது, இடம் கொடுத்து அரசு வேலை வாங்குவது உள்ளிட்ட முந்தைய அரசுகள் மத்திய அரசு வேலைகளில் ஊழல் செய்ததையும் விளக்கினார். ரயில்வே துறை அமைச்சராக இருந்த லல்லு பிரசாத் யாதவ், வேலைக்கு நிலம் என்ற ஊழல் செய்து தற்போது அந்த வழக்கு சிபிஐயிடம் விசாரணைக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் மற்ற அரசியல் கட்சிகள், மொழியை வைத்து பிரித்தாளும் அரசியல் செய்த போது, மொழியை வேலை பெறுவதற்கான வலுவான கருவியாக பாஜக அரசு மாற்றியுள்ளது எனப் பேசினார்.