பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் 9 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மறுநாளான 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு அதிபர் ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார். அதற்கடுத்த நாள் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகின்றனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
அமெரிக்கா, இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. 2014 ல் ஆட்சிக்கு வந்தது. பிரதமர் மோடியின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் நடத்த ஐ.நா ஒப்புக் கொண்டது. அதன்படி ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே 184 நாடுகள் யோகா தினம் கொண்டாடின.
ஜூன் 21, 2015ல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. முதல் சர்வதேச யோகா நிகழ்ச்சி புதுடெல்லி ராஜ்பாத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் 84 நாடுகளை சேர்ந்த 35,985 பிரமுகர்கள் 35 நிமிடங்கள் 21 யோகாசனங்களை செய்தனர்.
2016 > சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள், ராணுவ அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் என 30 ஆயிரம் பேருடன் பிரதமர் கலந்து கொண்டார்.
2017> லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 51ஆயிரம் பேருடன் யோகா பயிற்சி செய்தார்.
2018 > 4ம் ஆண்டு யோகா தினம் நிறைவு விழாவை முன்னிட்டு டேராடூனில் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் ”அமைதிக்கான யோகா” என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் தலைமையில் 50ஆயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
>2019 5வது சர்வதேச யோகா நிகழ்ச்சி ”இதயத்திற்கான யோகா” என்ற பெயரில் ராஞ்சியில் நடந்தது. இதில் 40ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது: “எங்கள் குறிக்கோள் – அமைதி, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான யோகாவாக இருக்கட்டும். “. யோகாவை ‘தடுப்பு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்’ அமைப்பின் தூணா அரசு செயல்படும் என தெரிவித்தார்.
>2020 , 2021 கொரோனா பெருந்தொற்று காரணமாக இணையதளம் வாயிலாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
>2022 8வது சர்வதேச யோகா தினம் “மனிதகுலத்திற்கான யோகா” எனும் தலைபில் முக்கிய நிகழ்வு மைசூர் அரண்மனை வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 15ஆயிரம் பொதுமக்களுடன் யோகா செய்தார்.
இம்முறை ஐ.நா யோகா விழாவில் மோடி என்பது இந்தியர்களுக்கு பெருமை தரும் விஷயம்.