தமிழக ஆளும் கட்சியையும் திராவிடப் பொய்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தோலுரித்து வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி சைபர் கிரைம் போலீசாரால் இன்று காலை 20.03.2023 கோவையில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உமா கார்க்கி என்ற பெண் பாஜகவுக்கு ஆதரவாளராக செயல்படுகிறார். இவர் நீண்ட நாட்களாக தனது சமூக வலைதள பக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
இவரது, சமூக வலைதள செயல்பாடுகளை பாராட்டி, நேற்று முன் தினம் 18.06.2023 அன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடிகர் விஜய் நடத்திய தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள், பெரியார் உள்ளிட்ட தலைவர்களை பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெரியார் பற்றி படிக்க சொன்ன கருத்துக்கு தனது சமூக வலைதள பக்கத்தில்,
“பெரியாரைப்பத்தி படிங்க. ~விசய் சோசப்பு.
ஏன்? உன் மகளை நீ கட்டப்போறியாக்கும்?…மக்கள்”
என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் புகார் அளித்ததின் அடிப்படையிலும், திமுக குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பும் விதமாகவும் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு வழக்கில் உமா கார்க்கி நாளை 21.06.2023 சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக இருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் அண்ணா, கருணாநிதி பேசாததையா உமா கார்க்கி பேசிவிட்டார் ? “பெரியாரைப் படியுங்கள் ” என்று கூறிய நடிகர் ஜோசப் விஜய்யிடம் அந்த நபர் தான் வளர்த்த மகளையே திருமணம் செய்தவர் என்று சுட்டிக் காட்டிய உமா கார்க்கியை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. அதுவும் மட்டமான முறையில்.. ஈவெரா – மணியம்மை திருமணம் நடந்தபோது அண்ணாதுரை எழுதியவற்றைப் படித்தால் அரண்டு போவீர்கள். கருணாநிதியும் கூட ஈவெராவைக் காய்ச்சி எடுத்து இருக்கிறார். அவர்கள் இன்று இருந்திருந்தால் அண்ணாவையும், கருணாநிதியையும் கைது செய்திருக்குமா இந்த விடியாத அரசு?
திமுகவின் ஜனநாயக மீறல் கைதுகள் அளவு கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கு கண்டிப்பாக நடத்தப்பட்டு ஈவேரா வின் திருமணம் பற்றி அன்றைய திராவிட இயக்கத் தலைவர்கள் இவ்வளவு இழிவாக ஈவெராவை பேசினார்கள் என்பது நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட வேண்டும்.
அவற்றோடு ஒப்பிட்டால் உமா கார்க்கி கூறியது ஒன்றுமே இல்லை என்று மக்களுக்குப் புரியும். என்று சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஈவெரா, மணியம்மை திருமணத்தை கண்டித்து அண்ணாதுரை வெளியிட்ட கடிதம் எவ்வளவு “தரமானது” என்பதை கீழ்க்கண்ட இணைப்புகளை சொடுக்கி, படித்து வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.