அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை கிடையாது: அனிதாவை முந்துகிறாரா பொன்முடி?

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் தான் அடுத்த டார்கெட் என ஊடகங்கள் சொல்லி வந்த நிலையில் அனிதாவை முந்தி தற்போது அந்த இடத்தைப் பிடித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக திமுக அமைச்சர் பொன்முடி, மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீதான செம்மண்  வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் அவரது உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் கடத்தி விற்பனை செய்து அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக திமுக அமைச்சர் பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, அவர்களது உறவினர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையை தடை செய்ய கோரி திமுக அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம மணி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன் அனுமதியை மீறி 2லட்சத்து64ஆயிரத்து644 லோடு லாரி செம்மண் எடுத்ததால் 28கோடியே 36லட்சத்து 40ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தும், ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவின் படி வழக்கு விசாரணையை தடை விதிக்க முடியாது என்று அமைச்சர் பொன்முடியின் மகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் கால்நடை வளம், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் உள்ள அனிதா ராதா கிருஷ்ணன் கடந்த 2006 அ.தி.மு.க ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். அதற்கு பின் திமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.5 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக 2008ல் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2020 முதல் அமலாக்கத்துறை இதை விசாரித்து வந்தது. இந்நிலையில் தற்போது, இதன் விசாரணை முடியும் தருவாயில் உள்ளதும், ஜூன் 21ம் தேதி அமலாக்கத்துறை அனிதா ராதா கிருஷ்ணனுக்கு எதிராக ஆஜராகி வாதட இருப்பதாகவும் தெரிய வருகிறது.  இதனால் அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட்0 யார் என்று தெரியாமல் குழப்பத்தில் அறிவாலாய அமைச்சர்கள் மண்டையை பிச்சுக் கொண்டு இருக்கிறார்களாம்.

தற்போது அனிதாவை பொன்முடி முந்தி  இருக்கலாம்.  வேறு யார் யார் இவர்களை முந்தப் போகிறார்களோ என்று பேசும் ஊடகங்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது நடைப்பயணத்தை துவக்கும் முன் அமலாக்கத்துறையால் திமுக பிரமுகர்கள் கைதாகி இருப்பார்கள் எனக் கூறுவது திமுகவை கலக்கத்தில் வைத்திருக்கிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top