காஷ்மீரை அதிரவைத்த ஷோபியான் கற்பழிப்பு வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த சிலருடன் சதி செய்து, பொய்யாக கற்பழிப்பு ஆதாரங்களை உருவாக்கியதற்காக 2 டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் நகரில் கடந்த 30.05.2009 அன்று ஆசியா மற்றும் நீலோபர் ஆகிய இரு பெண்கள் ஒரு ஓடைக்கரையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த வழக்கு இந்தியாவையே அதிர வைத்தது. பாஜக மீதும் மோடி அரசு மீதும் அனைத்துக் கட்சிகளும் குற்றம் சாட்டி மகிழ்ந்தன. பொது மக்களை நம்ப வைத்தன. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டையே ஊடகங்கள் உண்மையென கூறிவந்தன. வழக்கை சி.பி.ஐ தொடங்கிய பின்பு தான் காஷ்மீரில் நிலைமை சீரடைந்தது. ஆனால் தற்போது தீவிர விசாரணைக்குப் பின்பு அவர்கள் கற்பழிக்ககப்படவில்லை, நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இறந்த பெண்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், செய்த தில்லுமுல்லுகளால், இறந்த பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் பிலால் அகமது தலால் மற்றும் நிகாட்ஷாகீன் சில்லூ ஆகியோர் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்ட சிலருடன் கூட்டு சேர்ந்து பொய்யான ஆதாரங்களை உருவாக்கி பெண்களின் மரணத்தை கற்பழிப்பு மற்றும் கொலையாக மாற்றி உள்ளனர்.
இந்தியாவின் மீதும், ராணுவ வீரர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்திலும் அவர்கள் பொய் ஆதாரங்களை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பெண்களின் மரணத்தை கொலை என சித்தரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட சூழலில் பாஜக அரசை குறை சொன்னவர்கள் தாமாக வந்து மன்னிப்பு கேட்பார்களா?