சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பா?

சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு 4 நாட்கள் பொதுமக்கள் வழிபட அனுமதி கிடையாது என்று தற்காலிகமாக வைக்கப்பட்ட பதாகையை அகற்றச் முயற்சித்த இந்து சமய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தீட்சிதர்கள் புகார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ் பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த ஜூன் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கடந்த ஜூன் 25 அன்று தேரோட்டமும், ஜூன் 26 அன்று ஆனி திருமஞ்சன திருவிழாவும் நடந்தது  இதனை முன்னிட்டு கோயிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தேரோட்டம் நடைபெறுவதால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 24 முதல் 4 நாட்களுக்கு கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தற்காலிக அறிவிப்பு பதாதை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிதம்பரம் தில்லைக்காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சிதம்பரம் தாசில்தார் செல்வகுமாருடன் ஜூன் 25 அன்று மாலை கோயிலுக்குள் சென்றனர். கோயிலுக்குள் கனகசபை அருகே சென்ற செயல் அலுவலர் சரண்யா அங்கிருந்த பக்தர்கள் கனகசபை மேல் ஏறக்கூடாது என்று இருந்த பதாகையை அகற்ற முயற்பட்டார். இதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பதாகையை ஏன் அகற்றுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

ஒரு கட்டத்தில் செயல் அலுவலர், தீட்சிதர்களின் கேள்விகளை  சமாளிக்க முடியாமல் பதாகையை அகற்றாமலேயே கோயிலில் இருந்து திரும்பிச் சென்றார். போலீசில் புகார் அளித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவராம தீட்சிதர் இது சம்மந்தமாக சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.

தற்காலிகமாக வைக்கப்பட்ட பதாகை குறித்து தர்சன் தீட்சிதர் மற்றும் ஜெயஷீலா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தாசில்தார், போலீசார் எங்களிடம் விசாரித்த போது உரிய முறையில் விளக்கம் அளித்தோம்.

ஆனால் கோவில் பூஜை விதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலரது உதவியாளர் அறிவிப்பு பதாதையில் இருந்த வாசகங்களை தன்னிச்சையாக அழித்தார்.

இது தொடர்பாக அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகாரில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தில்லைக் கோவிலின் ‘கனகசபை’ என்பது சைவத்தின் ஆகப்பெரும் புனித பீடமாகும்.  அதனை காலால் மிதிக்க வேண்டுமென்ற எண்ணம் எந்த ஹிந்துக்களுக்கும் வருவதில்லை.  விஐபி கலாச்சாரத்தாலும், பக்தியில்லாதொரு அரசு, கோவிலின் மீது அதிகாரத்தை செலுத்துவதாலும் எப்போதும் கனகசபை அரசியல் மயப்படுகிறது.

கனகசபையில் நின்று வழிபடுவதை கோவில் நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.குறைந்தபட்சம் விசேஷ நாட்களிலாவது அதை செய்யாமல் தவிர்க்க நினைக்கிறார்கள்.ஆனித் திருமஞ்சனத்தை ஒட்டிய நாட்களில் கனகசபை மீது நின்று வழிபட தடை விதித்துள்ளார்கள் பொது தீட்சிதர்கள்.  நாளை முதல் வழிபடலாம் என்பது தீட்சிதர்களின் வாதம்.

ஆனால் நித்தம் நித்தம் எந்த பிரச்னையில் மீடியாக்களை செலுத்தி மக்களை திசை திருப்பலாம் என்று நாடகங்கள் அரங்கேறி வருவதால்.  அதில் தலையாய நாடகத்தை கூத்தர் திருவடிகளிலேயே நிகழ்த்துகிறது அரசு.. இதை நீண்டகாலம் நடராஜப் பெருமான் வேடிக்கை பார்க்க மாட்டார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தான் கோயிலில் பூஜைகள் மற்றும் இன்ன பிற ஆகம விதிகளின் படி பூஜைகள் நடந்து வருகிறது.  பழனியில் ஆகமவிதிகளை மீறி சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கருவறைக்குள் சென்று வழிபடுவதும், ஆகம விதிகள் பின்பற்றும் கோயில்களின் மீது ஏதாவது வன்மத்தை ஏற்படுத்தும் விதம் திமுக அரசு ஏதாவது ஒருவகையில் ஹிந்து எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஹிந்துக்கள் உஷாராக இருக்க வேண்டும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top