உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில், ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி 76 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக தலைவர்களில் பிரபலமான தலைவர்கள் யார் என்பது பற்றி 22 நாடுகளில் வோர்ல்ட் ஸ்டடிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட தரவுகளின் வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 76 % முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அவரை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து அதிபர் ஆலைன் பெர்செட் 2-வது இடத்தையும், மெக்ஸிகோ அதிபர் ஆண்ரஸ் லோபஸ் 3-வது இடத்தையும், 4-வது இடத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், 5-வது இடத்தை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோர் அடுத்தடுத்து இடம் பிடித்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 8-வது இடத்தையும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 15-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் 18-வது இடத்தையும் பிடித்துள்ளனர். வளர்ந்த நாடுகளின் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி பிரதமர் மோடி முதல் இடத்தை பெற்றுள்ளார்.
மொத்தம் 22 பேர் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் செக் குடியரசின் பிரதமர் பீட்டர் ஃபியாலா 20% சதவீத ஆதரவுடன் 22 வது இடத்தில் உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்விலும் உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீதம் ஆதரவுடன் முதலிடத்தில் இருந்தார் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது வோர்ல்ட் ஸ்டடிஸ்டிக்ஸ் நிறுவனமும் அதையே தெரிவித்துள்ளது.