சிதம்பரம் கனக சபை மீது ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் ஏற 4 நாட்கள் தற்காலிகமாக வைக்கப்பட்ட பலகை இந்தாண்டு புதிதாக வைக்கப்பட்டது அல்ல. இதற்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கனகசபை என்பது ஏதோ சாதாரண மண்டபம் அல்ல. திருவிழாக்காலங்களில் நடராஜர் எழுந்தருளி அபிஷேகம் கண்டருளும் புனிதமான இடம். சோழர்கள் காலத்திலிருந்தே ஆனித்திருமஞ்சன விழாவின் போது நடராஜர் அபிஷேகம் இங்குதான் நடக்கிறது என்பது ராஜேந்திரசோழரின் கல்வெட்டால் தெரியவருகிறது. ராஜராஜனும் ராஜேந்திரனும் ஏறத்துணியாத புனிதமான கனகசபையின் மீது திருவிழாக்காலத்தில் ஏன் ஏறவேண்டும் ? ஒவ்வொரு வருடமும் நடக்கும் வழக்கமான நடைமுறைதானே இது? கனகசபை மீது ஏறக்கூடாது என்று தற்காலிகமாக வைக்கப்பட்ட பலகையை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்ட போது தீட்சிதர்கள் ஏன் அகற்ற வேண்டும்? என்று கேள்வி எழுப்பியதற்கே அரசு அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்தனர். என்று போலீசில் புகார் அளித்தனர். ஆகம விதிகளின் படியும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படியும் தான் இன்று வரை பூஜைகள் மற்றும் இதர வழிபாடுகள் நடைபெறுகின்றன. என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.