சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் நடராஜ பெருமாள் ஆலயம் பிரச்னை தொடர்பாக 2014லேயே உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் வெற்றி பெற்றனர். தீர்ப்பில் தீக்ஷதர்களுடைய நிர்வாக உரிமையை அரசு பறிக்க முடியாது என தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எல்லாம் மீறி அன்று முதல் இன்று வரை இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாத்திலிருந்து தீட்சிதர்களை முழுவதுமாக விளக்க வேண்டும். என ஏதாவது ஒரு விதத்தில் தீட்சிதர்கள் மீதும், கோயில் நிர்வாகத்தின் மீதும் விமர்சனங்கள் பலவற்றை வைத்து கொண்டே வருகின்றனர்.
இது சம்மந்தமாக பாஜக முன்னாள் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்ததாவது: சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் நடராஜ பெருமானின் ஆலயம் சம்மந்தமான பிரச்சனை என்பது இன்று நேற்று நடைபெறுவது அல்ல. 1885 மெட்ராஸ் உயர்நீதி மன்றம் சிதம்பரம் பொது சொத்து. தீக்ஷதர்களுக்கு நிர்வாகம் செய்ய உரிமை இல்லை என்று உத்தரவிட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தமிழக இந்து அறநிலையத்துறை ஒரு செயல் அதிகாரியை இந்த கோவிலை நிர்வாகம் செய்ய நியமித்தது. இதை எதிர்த்து தீக்ஷதர்கள் வழக்குகள் தொடுத்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிரோர் ( shirur math ) மடம் நிர்வாகத்திலேயும் அந்த மாநில அரசு தலையிடுகிறது என்று சொல்லி அவர்கள் நீதி மன்றத்தை அணுகினார்கள். 1954 ஆண்டு உச்சநீதிமன்றம் ஷிரோர் மடம் வழக்கில் அளித்த தீர்ப்பில் மடாதிபதிகளும் தீக்ஷதர்களும் தனியான மத பிரிவினை சேர்த்தவர்கள் என தீர்ப்பளித்தது (religious denominations ) ஆகவே அவர்கள் அரசியலமைப்பு சட்டம் 26 படி அவர்களுடைய மடங்களை ஆலயங்களை நிர்வகிக்க தனி உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.
முன்னாள் முதல்வர் திரு.MGR உட்பட தமிழகத்தை ஆண்ட பல அரசுகள் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்க அதிகாரிகளை நியமித்தனர். ஆனால் அவைகளை தீட்சதர்கள் சட்ட பூர்வமாக நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து எதிர்த்தனர்.
இறுதியாக 2014 உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்றனர். உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தீக்ஷதர்களுடைய நிர்வாக உரிமையை அரசு பறிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. நீதிஅரசர்கள் B .S . சவுஹான் மற்றும் S . A . பாப்டே அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்தது.
இந்த தீப்பிற்கு பிறகு அன்றைய ஜெயலலிதா அரசு சிதம்பரம் கோவில் நிர்வாக விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நிர்வாகத்தில் தலையிடுவதை நிறுத்தி கொண்டது. ஆனால் தற்போது உள்ள கடவுள் நம்பிக்கையே அற்ற திமுக அரசு வேண்டுமென்றே சிறு சிறு விஷயங்களிலும் தலையிட்டு குழப்பத்தை விளைவிக்க நினைக்கிறது.
ஆலயத்தை நிர்வாகம் செய்யும் விஷயத்தில் தீக்ஷதர்களை இந்து அறநிலையத்துறை சட்டங்கள் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர்களுக்கு அரசியல் அமைப்பு சட்டம் 26 படி உரிமை உண்டு என்றும்உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ள போது அரசு தீர்ப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசே கேலிக்குரியதாக ஆக்க முயலுகிறதோ என நினைக்க தோன்றும். நிர்வாகத்தில் பிரச்னை இருந்தால் அதனை சரி செய்யத்தான் முயல வேண்டுமே தவிர நிர்வாகத்தையே அரசு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தீர்ப்பில் உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிப்பதுதான் சரியானதாக இருக்கும்.” என தெரிவித்திருந்தார்.