சிதம்பரம் கோயில் அறநிலைய துறையினரின் பணி வரம்புக்கு உட்பட்டதா?

தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு என்ன வேலை? என இந்துமுன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் தெரிவித்திருந்தாவது: ”சிதம்பரம் நடராஜர் கோயிலில், ‘கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை’ என தீட்சிதர்கள் வைத்த பதாகையை அதிகாரிகள் அகற்றினர்.
இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அறநிலையத்துறை பெண் அதிகாரி சரண்யாவை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் தீட்சிதர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நமது கேள்வி?

அறநிலையத்துறை அதிகாரிக்கு சிதம்பரம் கோயிலில் என்ன வேலை? சிதம்பரம் கோயில் அவர் பணி வரம்புக்கு உட்பட்டதா? இல்லையே! பின் அவருக்கு அங்கு என்ன வேலை?

எத்தனையோ அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் சிதிலமடைந்த நிலையில் பூஜையின்றி, கேட்பாரற்று நிலையில் இருந்து வருகிறது அதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுப்பதை விட்டு சிதம்பரம் கோயிலில் மூக்கை நுழைப்பது ஏன்?

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மிகத் தெளிவாக சொல்லி உள்ளது. கோயிலுக்கும் அறநிலையத்துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று…

பிறகு தன் பணி வரனுக்கு உட்படாத இடத்திற்கு சென்ற அதிகாரி மீது தானே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அதைவிட்டு அத்து மீறிய அதிகாரியை தடுத்தவர்கள் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்?

அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
காவல்துறை உடனடியாக வழக்கை வாபஸ் பெற வேண்டும்.
அத்து மீறிய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top