தமிழக அரசின் கீழ் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பெரும்பாலன கோயில்கள் நிர்வாகம் செய்யப்படும் சுழலில் சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டும் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் நீதிமன்ற உத்தரவுகளின் படி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தீட்சிதர்களின் நிர்வாகம், அறநிலையதுறை நிர்வாகத்தை விட சிறப்பாக உள்ளது என பலதரப்பினரும் சமூக ஊடகத்தில் தெரிவித்துவருகின்றனர்.
இது சம்மந்தமாக பிரபல தினசரி நாளிதழின் ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீ ராம் தெரிவித்ததாவது: “இன்றைய நிலையில்…
கட்டணம் இல்லாமல்… வரிசையில் நிற்காமல்… கூண்டுகளுக்குள்ளும் கம்பிகளுக்குள்ளும் இடித்துக் கொண்டிருக்காமல்… சிதம்பரம் நடராஜர் கோயிலில் நான்கு கோபுர வாயில் வழியாகவும் உள்ளே சென்று… ஐந்து நிமிடங்களில் ஸ்வாமியை தரிசனம் செய்துவிட்டு… உடனே திரும்பி விடலாம்.
தீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயிலில் உண்டியல் கிடையாது… திருமூலர் வகுத்த ஆறு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது!
மக்கள் எப்போதும் எந்த நேரத்திலும் வரிசையில் நிற்காமல் நேரடியாகச் சென்று கூத்தாடுவானை, கூத்தாட்டுவானை, தில்லைக்கூத்தனை கண்ணார தரிசிக்கலாம்.
நாத்திக அரசுத்துறை, கோயில்களை வைத்து அடித்த கொள்ளை பத்தாதென்று… மேலும் மேலும் சுரண்டிக் கொழுக்க… தில்லைக் கோயிலையும் கையகப்படுத்த… அடியாட்கள் மூலம் வேண்டுமென்றே பல பிரச்னைகளை உருவாக்கி… தாங்கள் போட்ட பிச்சையில் வேலைக்கு வந்தவர்களை வைத்துக் கொண்டு…. பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது.
அவ்வப்போது தில்லைக்கு சோதனை ஏற்படும்…. இப்போதும் கோயிலுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. சாதுவான பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்ளவும்! முரட்டு பக்தர்கள் ஏதோ செய்து கொள்ளவும்..!” என்றார்.