தமிழக அரசும் பில் கொடுக்குமா?

பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு இலவசமாக உணவு தானியங்களை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஜூன் 2023 ல் மட்டும் தமிழகத்தில் 3.65 கோடி மக்கள் 3.05 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை பெற்றுள்ளனர் என இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானவில் ரேஷன் கடைகளில் வாங்கப்பட்ட பொருட்களுக்கு பில் கொடுக்கின்றனர்.  இதில் மொத்தம் வழங்கப்படும் 24 கிலோ அரிசியில் மத்திய அரசின் மானியத் தொகை கிலோ ஒன்றுக்கு  ரூ.36.75 வீதம் 20 கிலோவுக்கு ரூ.734 வழங்குகிறது. இந்நிலையில் மாநில அரசு கிலோ ஒன்றுக்கு ரூ.39.18 வீதம் 4 கிலோவுக்கு ரூ.156.72 வழங்குகிறது என தெலுங்கான மாநில அரசின் ரேஷன் கடைகளில் பில் போட்டு கொடுக்கின்றனர். இதே போல் தமிழகத்திலும் விவரமாக பில் போட்டு கொடுப்பார்களா? பொங்கலுக்கு வழங்கும் அரிசி, கரும்பு, மண்டவெல்லம் என பல வகையில் ஊழல்கள் நடந்துள்ளது.  இதை போல், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதும் நாம் அறிந்ததே. தமிழக அரசு ரேஷன் கடையில் மத்திய அரசு, மாநில அரசு வழங்கும் பொருட்கள் விவரமாக தமிழக அரசு விவரமாக பில் போட்டுக் கொடுக்குமா என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top