ஈரோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ஈஸ்வரன் அவர்களின் பெயரை ஈரோடு ரயில் நிலையத்திற்கு பெயர் சுட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சுதந்திரப் போராட்ட தியாகியும், பவானிசாகர் அணையில் நிறுவி லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிய பாசனத் தந்தை கருங்கல்பாளையம் திரு. M.A ஈஸ்வரன் அவர்களுடைய பெயரை ஈரோடு ரயில் நிலையத்திற்கு சூட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல்.
M A ஈஸ்வரன் அவர்களின் புகழினை வெளியுலகிற்கு கொண்டு வந்து பாரதப் பிரதமர் வரை எடுத்துச் சென்று ஈரோடு ரயில் நிலையத்திற்கு M A ஈஸ்வரன் பெயர் வைப்பதற்கான பெரு முயற்சி எடுத்த சக்ரா அறக்கட்டளை நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான திரு. A R ராஜசேகர் அவர்களை ஈரோடு மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஈரோட்டில் நடந்த மாநாட்டில் இது சம்மந்தமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது குறிப்பிடதக்கது.