மோடி அரசு பதிவியேற்ற பின்பு, உலகளவில் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உருவானது, கொரோனா காலத்தில் உணவு ஏற்றுமதியை கண்டித்து வந்த எதிர்க்கட்சிகள் இப்போது ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதை வரவேற்காமல் எதிர்ப்பது வெற்று அரசியல் ! இந்த நடவடிக்கை பல காலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் ‘‘பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி’’ ஏற்றுமதியை தடை செய்ய இந்தியா முடிவு செய்திருப்பதால், உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுதி இருக்கிறது.
மேலும் இந்தியா விதித்த தடையால், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அரிசி விலையை டன்னுக்கு ரூ.42,000 உயர்த்தி உள்ளன. இதனால் உலக சந்தையில் அரிசியின் விலை 10 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணம் இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு மக்களின் அரிசி தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், அரிசி விலையை நிலையானதாக வைத்திருப்பதற்காக வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மற்றும் உடைந்த அரிசி ஆகியவை இந்தியாவில் இருந்து 10 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதிக்கு காரணமாகின்றன, இது தற்போது 22 மில்லியன் டன்களாக உள்ளது. ஏற்றுமதிக்கான தடை தற்போது புழுங்கல் அரிசிக்கு (7.4 மில்லியன் டன் ஏற்றுமதி) பொருந்தாது, அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதியில் பாதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய உணவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ‘‘இந்திய சந்தையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைக் குறைக்கவும், இந்திய அரசாங்கம் ஏற்றுமதி கொள்கையில் திருத்தம் செய்துள்ளது,’’ என கூறப்பட்டுள்ளது.
ஆனால் இது தெரியாமல் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த அறிவு ஜீவிகள் பிரதமர் மோடி உலக நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அரிசி ஏற்றுமதியை தடை செய்து விட்டார் என்ற கட்டுக்கதையை அடுக்கி வருகின்றனர். உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு நமது நாட்டிற்கும் வரும் என்றெல்லாம் பேசி வருவதை பார்க்கிறோம். ஆனால் இது உண்மை இல்லை.
நமது நாட்டில் மழைப்பொழிவு சீரான பின்னர் அனைத்தும் மாறும், அப்போது மீண்டும் உலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியை தொடங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
கொரோனா காலத்தில் உலகமே உணவுக்கு திண்டாடிய வேளையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 80 கோடி பேருக்கு மோடி அரசால் உணவளிக்க முடிந்தது.
-வ.தங்கவேல்