ஜிஎஸ்டி வசூலில் நிகழாண்டு ஜூலை வரை தமிழகத்தின் பங்காக ரூ.12,625.39 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 25) தெரிவித்தார்.
கடந்த 2022, 2023 நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வசூலின் மொத்தப் பகிர்வு, இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் பகிர்வின் நிலுவைத் தொகை; நிகழ் நிதியாண்டில் சிறப்பாக ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு அதிகப் பங்கீடு ஒதுக்கீடு செய்யப்படுமா? போன்ற கேள்விகளை மாநிலங்களவை திமுக எம்.பி. எம்.சண்முகம், வைகோ உள்ளிட்டோர் எழுப்பியிருந்தனர்.
இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில்; மத்திய ஜிஎஸ்டி வசூல் நாட்டின் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்படுகிறது. அநே நேரத்தில் மாநில ஜிஎஸ்டியை அந்தந்த மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்படுகிறது.
இந்திய ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ள மத்திய ஜிஎஸ்டி ஒரு பகுதி, நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
கடந்த 2022,23 நிதியாண்டில் இத்தகைய மத்திய ஜிஎஸ்டி பகிர்வாக மொத்தத் தொகை ரூ.2,68,334.19 கோடி மாநிலங்களுக்கு 14 தவணைகளில் விடுவிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை எதுவும் நிலுவையில் இல்லை.
நிகழ் 2023, 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.10.21 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்த நிதியாண்டில் ஜூலை மாதம் வரை இயல்பான தொகையை விட இரண்டு மடங்காக மாநிலங்களுக்கு ரூ.3,09,521.22 கோடி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தமிழகத்திற்கு ரூ.12,625.39 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜூலை வரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எதுவும் நிலுவையில் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால் விடியா அரசு தமிழகத்திற்கு எதுவுமே மத்திய அரசு வழங்கவில்லை என்று பொய்யான தகவலை மக்களிடம் பரப்புவார்கள். மத்திய அரசு வழங்கிய ஜிஎஸ்டி தொகைப்பற்றி ஒரு வார்த்தை கூட தமிழக மக்களுக்கு தெரிவிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.